அரசை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு ஊழியர்காளுக்கு எச்சரிக்கை – சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு – tn director of health orders warning govt employees disciplinary action for criticizing govt

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் அதிரடி சுத்தறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்லது தமிழக அர்சியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாண வெளியீடு

கடந்த 1973-ம் ஆண்டு நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுவெளியில் விமர்சனம் கூடாது நல்லுறவை பாதிக்கக்கூடாது விமர்சன கூட்டங்களில் பங்கேற்கக்கூடாதுபொதுவெளியில் விமர்சனம் கூடாது: அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ பாதகமாக விமர்சிக்கக்கூடாது. அதாவது செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ் (Memes) போன்றவை மற்றும் பொதுக்கூட்டங்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லுறவை பாதிக்கக்கூடாது: பிற அரசுகளுடனான நல்லுறவை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது.

விமர்சன கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது: அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது.

யாருக்கெல்லாம் இந்த உத்தரவு

இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சார்நிலை அலுவலகங்கள், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கோப்புக்காக என இந்த ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

மீறினால் தண்டனை?

விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது சுகாதாரத்துறையில் மட்டுமே அமல்படுத்தபட்டாலும், விரைவில் அனைத்து துறைகளுக்கும் இது போன்ற ஆணை வெளியாகலாம் என கூறப்படுகிறது.

நசுக்கப்படும் கருத்து சுகந்திரம்?

அரசு ஊழியகளாக மக்கள் பணியாற்றி வருகின்ற போதிலும், அவர் அவர்களுக்கே தனிப்பட்ட அரசியல், சமூக பார்வை, சித்தாந்தம் என இருக்கலாம். இப்படியான சூழலில் தமிழக அரசு இது போன்ற ஆணை வெளியிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது நேரடியாக அரசு ஊழியகர்கள் மீதும் அவர்களின் தனிப்பட்ட கருத்து சுகந்துரத்தின் மீதும் தாக்குதல் நடத்துவது போன்று அமைந்துள்ளது.

அரசு ஊழியர் என்பதால் ஒருவர் தனது நிலைபாட்டிற்கு ஒத்துவராத அரசின் செயல்பாட்டை விமர்சிக்க கூடாது என்பது, அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறையை திணித்து கையால்வதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆணை திரும்ப பெற வலியுறுத்தல்

இந்த ஆணை வெளிவந்ததில் இருந்து இதனை அரசு திரும்ப பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது தனிப்பட்ட கருத்து சுகந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் விமர்சித்துள்ளனர்.

Source link