ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் நாளை தாமதமாக புறப்படும்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மண்டலத்தில் சிங்கப்பெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே என்ஜினீயரிங் பணி நடைபெற இருப்பதால், சென்னை எழும்பூர் – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (ஏப்ரல் 12) 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12635) 1 மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link