லோகா படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்..நடிகர் மம்முட்டி

கேரளாவில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. துல்கர் சல்மானின் ‘வேபாரர் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. டாமினிக் அருண் இயக்கியிருந்த இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்பு வேடங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்த இப்படம் வசூல் வேட்டையை நடத்தியது.

முதல் பாகம் ஹிட் அடித்ததால், இதன் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்படுகிறது. முதல் பாகத்தில் ‘மூத்தோன்’ என்ற கதாபாத்திரம் வரும். முகம் தெரியாமல் கை மட்டும் தோன்றும் கதாபாத்திரமாக இந்த கேரக்டர் இடம் பெற்று இருக்கும். இந்த கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மம்முட்டி. இது பற்றி மம்முட்டி சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். மம்முட்டி கூறியுள்ளதாவது: –

லோகா படத்தில் கூட முதலில் நான் இருக்கிறேன் என எனக்கு தெரியாது. அதில் `வேண்டாம்’ என்ற ஒரே வசனம் மட்டும் நான் பேச வேண்டும் என கூறினார்கள். அந்தப் படத்தில் என்னுடைய கையாக காட்டப்படுவது கூட என் கை அல்ல. படம் வெளியான பின்னர் தான், அது நீங்கள் குரல் கொடுத்துள்ள கதாப்பாத்திரத்தின் கை என்று சொன்னார்கள். இப்போது அதில் நான் நடித்தே ஆக வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருக்கிறது. உண்மையில் அவர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். இனி அதில் நான் நடிக்க வேண்டுமானால், எனக்கு கொடுக்கும் சம்பளத்தின் மூலம் என்னை சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறினார்.

Source link