நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் தனுஷும் அரசியலை நோக்கி நகர்கிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. தனுஷ் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்துவது, டெல்லிக்குச் செல்வது மற்றும் மகளிர் அணியை ஒருங்கிணைப்பது போன்ற நகர்வுகளில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் அரசியல் வருகை
மேலும் நடிகர் தனுஷ் அவரது பெயரில்‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நாளை டெல்லியில் நடக்க போவது என்ன? பாஜக எடுக்க போகும் முடிவு!
இந்தச் சூழலில், அரசியல் பிரவேசம் தொடர்பாக முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தனுஷ் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள அவர், அரசியல் வியூக நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைச் சந்தித்து தமிழக அரசியலில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள், கட்சியை அமைப்பதற்கான வழிமுறைகள், எதிர்காலத் தேர்தல் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் ரகசிய மீட்டிங்..
இதற்கிடையே, தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தனுஷ் அரசியல் நகர்வுகள் குறித்து யூடியூப் சேனலில் பேசிய ரங்கராஜ் பாண்டே, நடிகர் தனுஷுக்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாகவே உண்டு. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே, தனுஷ் அந்த உள்வட்ட ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். தலைவரின் அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள் அவரிடம் இருந்தன.
தனுஷின் ஜாதக அமைப்பை ஆராய்ந்த பல ஜோதிடர்கள், அடுத்த பத்தாண்டுகளில் அவரது கலைத்துறை வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் எதிர்பாராத ஒரு அரசியல் திருப்புமுனை அவருக்கு அமையும் எனக் கூறியுள்ளனர்.எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்க்கு இளமை முதலே அரசியல் தன்னம்பிக்கையை ஊட்டியது போல, தனுஷுக்கும் அரசியல் களம் இறங்குவதற்கான உறுதியான உந்துதல் ஏற்பட்டுள்ளது.
பாண்டே சொன்ன முக்கியத் தகவல்கள்
விஜய் தன்னை ஒரு மதச்சார்பற்ற, சிறுபான்மையினர் ஆதரவு மற்றும் மிதவாத மையவாதியாக முன்னிறுத்துகிறார். அண்ணாமலை / பாஜக: ஆளும் திமுகவுக்கு எதிரான சாஃப்ட் இந்துத்துவா மற்றும் தீவிர இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றனர் தனுஷின் ஆன்மீக முகம் தனுஷ் தன்னை எப்போதுமே வெளிப்படையான தீவிர சைவ ஆன்மீக அடையாளத்தோடு நிறுத்துகிறார். நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை, சட்டையின் வெளியே தெரியும் ருத்ராட்ச மாலை, அறிக்கைகளில் தவறாமல் இடம்பெறும் “ஓம் நமச்சிவாய” வாசகம் மற்றும் அவரது திரைப்படத் தலைப்புகள் ஆகியவை அவரது தீவிர ஆன்மீகப் பிம்பத்தைப் பறைசாற்றுகின்றன.பாஜக மீதான ‘வடக்கத்திய கட்சி’, ‘பார்ப்பனக் கட்சி’ போன்ற விமர்சனங்கள், நடிகர் தனுஷின் ஆன்மீகப் பிம்பத்துக்குப் பொருந்தாமல் போகலாம் எனக் கருதப்படுகிறது. ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி, பாஜக தலைமையிலான கூட்டணியில் முக்கிய இடத்தைப் பிடித்ததைப் போல, தமிழகத்திலும் தனுஷ் பாஜகவுடன் இணைந்தோ அல்லது தனித்துவமான ஆன்மீக அரசியல் சக்தியாகவோ உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
எந்தவொரு புதிய அரசியல் கட்சியும் மத்தியில் ஆளும் பாஜக போன்ற தேசியக் கட்சியுடன் சுமூகமான நல்லுறவைப் பேணவே விரும்பும். நடிகர் தனுஷ் இப்போதைக்கு ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அரசியல் ஆலோசனைகளை மேற்கொள்வது போன்ற ஆரம்பக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அவர் பவன் கல்யாண் பாணியில் கூட்டணி அரசியலைத் தேர்ந்தெடுப்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது; காலம்தான் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறி பாண்டே விவாதத்தை நிறைவு செய்தார்.
