சோலார் பேனல் அமைக்க தமிழக அரசு கூடுதல் மானியம்: உங்கள் வீட்டுக்கும் கிடைக்குமா?-விண்ணப்பிக்கும் முறை – how to apply for tneb rooftop solar subsidy eligibility and application process

தன்னிறைவு பெற்ற பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்கும் உயரிய நோக்கில், வீடுகள்தோறும் மேற்கூரை சூரியசக்தி (Rooftop Solar) அமைப்புகளை நிறுவுவதற்காகத் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNGDECL) சார்பில் சிறப்புக் கூடுதல் மானியம் வழங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

“மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி அமைப்பது” என்ற இலக்கை முன்வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி-மினி ஏசி பஸ் திட்டம்!

மானிய விவரங்கள் மற்றும் நன்மைகள்

மத்திய அரசின் மானியத்துடன் சேர்த்து, தமிழக அரசின் சிறப்புக் கூடுதல் மானியமும் வழங்கப்படுவதால் நுகர்வோருக்குப் பெருமளவில் நிதிச் சுமை குறைகிறது. நிறுவுதிறன் அடிப்படையில் மானிய விவரங்கள் வருமாறு:

1 கிலோவாட் வரை

மத்திய அரசு மானியம்: ₹30,000 தமிழக அரசு சிறப்புக் கூடுதல் மானியம்: ₹5,000 மொத்த மானியம்: ₹35,000 இரண்டு மாதத்திற்கு தோராயமான மின் கட்டண சேமிப்பு: ₹2,0162 கிலோவாட் வரை மத்திய அரசு மானியம்: ₹60,000 தமிழக அரசு சிறப்புக் கூடுதல் மானியம்: ₹10,000 மொத்த மானியம்: ₹70,000 இரண்டு மாதத்திற்கு தோராயமான மின் கட்டண சேமிப்பு: ₹6,5523 கிலோவாட் வரை மத்திய அரசு மானியம்: ₹78,000 தமிழக அரசு சிறப்புக் கூடுதல் மானியம்: ₹22,000 மொத்த மானியம்: ₹1,00,000 இரண்டு மாதத்திற்கு தோராயமான மின் கட்டண சேமிப்பு: ₹11,592(குறிப்பு: இருமாதத்திற்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரின் மின் கட்டணத்தின் அடிப்படையிலும், சூரிய மின் உற்பத்தி உள்ளூர் வானிலையின் அடிப்படையிலும் மாறுதலுக்குட்பட்டது).

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

கூடுதல் நிதி உதவி: மத்திய அரசு மானியத்துடன் தமிழக அரசின் சிறப்புக் கூடுதல் மானியமும் நேரடியாகக் கிடைக்கிறது. எளிய விண்ணப்ப முறை: தமிழக அரசின் கூடுதல் மானியத்திற்குத் தனியாக இரண்டாவது விண்ணப்பம் எதுவும் செய்யத் தேவையில்லை. ஒரே தளம்: இணையதளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், மானிய விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை ஒரே இடத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை: இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் https://tnebltd.gov.in/usrp/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்யலாம். மேலும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்தும் தங்களின் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு, மாதாந்திர மின் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கும் இச்சேவையைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. யாருக்கெல்லாம் மானியம் கிடைக்கும்?

வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்கள் (Residential Consumers):

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) கீழ் வீட்டு மின் இணைப்பு (Domestic Tariff) வைத்துள்ள அனைத்துக் குடியிருப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பயன்பாடுகளுக்குத் தமிழக அரசின் கூடுதல் மானியம் கிடைக்காது (அவர்கள் மானியமில்லா சோலார் அமைப்பிற்கு விண்ணப்பிக்கலாம்).

2சொந்த வீடு அல்லது மேற்கூரை வசதி

சோலார் பேனல்களைப் பொறுத்துவதற்குத் தேவையான நிழல் விழாத போதிய கூரை/மாடி வசதி இருக்க வேண்டும்.

3.மின் இணைப்பு மற்றும் ஆவணப் பொருத்தம்

மின் இணைப்பு எண், ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களில் பெயர் சரியாகப் பொருந்தி இருக்க வேண்டும்.

பழைய நிலுவைத் தொகைகள் ஏதும் மின் கட்டணத்தில் இருக்கக் கூடாது.

4 அங்கீகரிக்கப்பட்ட சோலார் உபகரணங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (DCR – Domestic Content Requirement) சோலார் பேனல்கள் மற்றும் TEDA / PM Surya Ghar-ல் பதிவுசெய்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் (Empanelled Vendors) மூலம் நிறுவப்படும் அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்திற்குத் தனியாகத் தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ (PM Surya Ghar) இணையதளத்தில் விண்ணப்பித்தாலே மாநில அரசின் கூடுதல் மானியமும் தானாகவே இணைக்கப்படும்.

படி 1: இணையதளத்தில் பதிவு செய்தல்

மத்திய அரசின் pmsuryaghar.gov.in அல்லது தமிழக அரசின் tnebltd.gov.in/usrp/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

உங்களது மாநிலம் (Tamil Nadu), மின்தொடர் நிறுவனம் (TNPDCL) மற்றும் உங்கள் மின் இணைப்பு எண் (Consumer Number), மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.

படி 2: விண்ணப்பம் சமர்ப்பித்தல்

லாக்-இன் செய்த பிறகு, “Apply for Rooftop Solar” என்பதைத் தேர்வுசெய்து, உங்கள் வீட்டின் கூரை பரப்பு மற்றும் தேவைப்படும் கிலோவாட் (1 kW, 2 kW அல்லது 3 kW) அளவைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

படி 3: அனுமதி (Feasibility Approval)

மின்வாரிய அதிகாரிகள் உங்கள் மின் இணைப்பைப் பரிசீலித்து, சாத்தியக்கூறு அனுமதியை (Technical Feasibility) இணைய வழியிலேயே வழங்குவார்கள் (3 kW வரையிலான அமைப்புகளுக்கு உடனடி அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது).

படி 4: விற்பனையாளரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நிறுவுதல்

இணையதளத்தில் பட்டியலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்களில் (Empanelled Vendors) ஒன்றைத் தேர்வு செய்து, சோலார் பேனல்களை மாடியில் நிறுவ வேண்டும்.

படி 5: நெட்-மீட்டர் (Net Meter) மற்றும் ஆய்வு

சோலார் கட்டமைப்பு முடிந்ததும், மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து, இருவழி மின்சார அளவி (Net Meter) பொருத்திச் சேவையைத் தொடங்கி வைப்பார்கள் (Commissioning Certificate).

படி 6: மானியத் தொகை கணக்கில் வரவு வைத்தல் (Direct Benefit Transfer)

ஆய்வு முடிந்த சில நாட்களில் மத்திய அரசின் மானியம் (ரூ. 78,000 வரை) உங்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரும்.

அது வரவு வைக்கப்பட்ட 7 முதல் 15 நாட்களுக்குள் தமிழக அரசின் கூடுதல் மானியத் தொகையும் (ரூ. 22,000 வரை) உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

சமீபத்திய மின் கட்டண ரசீது (EB Bill) ஆதார் கார்டு (Aadhaar Card) ரத்து செய்யப்பட்ட வங்கி கணக்கு காசோலை / பாஸ்புக் நகல் (Cancelled Cheque / Bank Passbook) வீட்டின் கூரை அல்லது கட்டிடத்தின் புகைப்படம்.

Source link