லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; 3 பேர் பலி

பெய்ரூட்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடைய ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு டிரம்ப்பும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், தெற்கு லெபனானின் தெற்கே நபதியே என்ற மாகாணத்தின் மைபாதவுன் நகரில் வான்வழியே இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று, பதிலடியாக வடக்கு இஸ்ரேலின் ராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Source link