நீட் பாஸ் ஆகிவிட்டால் டாக்டர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருப்பவர்களுக்கு, இந்த செய்தி நிச்சயம் கலக்கமூட்டலாம். நாடு முழுவதும் காலியாக இருக்கும் மருத்துவ படிப்பிற்கான இடங்கள், அதிகப்படியாக கல்வி கட்டணம் ஆகியவை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
நீட் தேர்வு என்றாலே சர்ச்சை, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் அந்த தேர்வு நடைமுறை மற்றும் அதன்மூலம் படித்து மருத்துவர்களாக பணிபுரியும் மாணவர்களின் நிலை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காவிட்டால், கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளுக்கு தான் போக வேண்டும். அப்படி பணத்தை அள்ளி கொடுத்து படிக்கும் மாணவர்கள் மருத்துவர்களாக மாறும் போது நிலைமை எப்படி இருக்கிறது என்று விரிவாக அலசலாம். 2026 நீட் தேர்வு புள்ளிவிவரம்
எண்ணிக்கை
பதிவு செய்த மாணவர்கள் 22,79,743 பேர் தேர்வு எழுதியவர்கள் 19,99,895 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி 11,21,185
எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காதவர்கள் சாய்ஸ்
தேசிய மருத்துவ கமிஷனின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மொத்த இடங்கள் 1,40,664 ஆகும். மேற்சொன்ன கணக்கின் அடிப்படையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காமல் 9,80,521 பேர் இருப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் பி.டி.எஸ், ஆயுஷ், வெட்னரி போன்ற படிப்புகளை தேர்வு செய்வர்.
டாக்டர்கள் சம்பளம் இவ்வளவா? யாருக்கும் தெரியாத விஷயம்- மருத்துவர் கருத்து
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் இடங்கள்
இந்திய அளவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 55,889 இடங்களும், Deemed Universities உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளில் 84,775 இடங்களும் இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 78 மருத்துவ கல்லூரிகளில் 14,299 இளங்கலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. இதில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் (5,349 சீட்கள்), 62 தனியார் மருத்துவ கல்லூரிகள் (8,950 சீட்கள்) உள்ளன.
நடப்பாண்டு Deemed University-யில் 836 மருத்துவ இடங்கள் நிரப்பப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கணக்கெடுத்து பார்த்தால் 4,068 இடங்கள் காலியாகவுள்ளன. இதில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 3,426, பிடிஎஸ் இடங்கள் 499, பி.எஸ்சி நர்சிங் இடங்கள் 143 என்பது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் 2025-26 எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக கல்வி கட்டணம்
கல்லூரிகள் வகை
கட்டணம்/ ஓராண்டிற்கு (ரூபாயில்)
அரசு மருத்துவ கல்லூரிகள் 18,073 அரசு மருத்துவ கல்லூரிகள் (எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி) 12,073 அரசு மருத்துவ கல்லூரிகள் (PwBD மாணவர்கள்) 10,073 ESIC மருத்துவ கல்லூரி, சென்னை(இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு ரூ.24,000/ ஆண்டிற்கு) 1,00,000 தனியார் மருத்துவ கல்லூரிகள் 4.35 லட்சம் 5.40 லட்சம் Deemed Universities 23 லட்சம் 35 லட்சம்
கோடிக்கணக்கில் கட்டணம் செலவீடு
நீட் தேர்வு வேண்டாம் என்று ஒருபுறம் குரல் எழுப்பி வரும் சூழலில், அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பலருக்கு தாங்கள் எதிர்பார்த்த எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியாத நிலை தான் காணப்படுகிறது. உதாரணமாக Deemed University ஒன்றில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மாணவர் மருத்துவ படிப்பை படிக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் செலவு செய்யும் தொகை சுமார் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இதில் கல்வி கட்டணம் மட்டுமே அடங்கும். விடுதி கட்டணம், உணவு கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
மருத்துவர்களின் மாத சம்பளம்
ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிகிறது. இவ்வளவு செலவு செய்து எம்.பி.பி.எஸ் மட்டும் படித்தால் போதுமா? என்றால் போதாது என்கின்றனர். முதுகலை படிப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. அதற்கு ஆண்டிற்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் முடித்துவிட்டு வேலையில் சேரும் போது மாத சம்பளம் பெரிதாக இல்லை என்கின்றனர். இங்கு பிரச்சினை என்பது செலுத்திய கல்வி கட்டணத்தை மீட்கும் வகையிலான மாத சம்பள கணக்கின் அடிப்படையில் பார்க்கின்றனர்.
EMI கட்ட முடியாமல் மருத்துவர்கள் சிரமம்
ஏனெனில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தால் மட்டுமே Deemed Universities-ல் மருத்துவ படிப்பை படித்துவிட்டு வெளியேற முடியும். லட்சாதிபதிகள் கூட கடன் வாங்கியே படிக்க முடியும். அப்படி கடன் வாங்கி விட்டு படித்து வேலையில் சேர்ந்தால், கடனை மாதத் தவணையாக செலுத்த வேண்டும். அதை வாங்கும் மாத சம்பளத்தில் இருந்து தான் எடுக்க வேண்டி வரும். மருத்துவமனைகளின் வகைகள்
மாத சம்பளம் (ரூபாயில்)
டயர் 1 மருத்துவமனைகள் 50,000 – 60,000 டயர் 2 மருத்துவமனைகள் 40,000 – 50,000 டயர் 3 மருத்துவமனைகள் 25,000 முதல் அரசு மருத்துவமனைகள் 25,000 முதல்
எம்.பி.பி.எஸ் மீது குறையும் ஆர்வம்
இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படித்து விட்டு, மருத்துவர்களாக பணியாற்ற தொடங்கும் போது எப்படியும் 27, 28 வயதை தொட்டு விடுகிறது. அதன்பிறகு 35 வயது நெருங்கும் போது மிகவும் மன அழுத்தம் நிறைந்த சூழலுக்கு தள்ளப்படுவதாக கூறுகின்றனர். மிகப்பெரிய அளவில் செலவு செய்து மருத்துவம் படித்தும், அவர்கள் விரும்பியது போல வாழ்க்கையை கட்டமைத்து கொள்ள முடிவதில்லை என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. இதனால் மருத்துவ படிப்பு மீதான ஆர்வம் ஒருபுறம் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source link
