வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் (SSR) தொடர்பான இக்கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து இந்த அதிரடி வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல முக்கிய கட்சிகள் ஒரே நேரத்தில் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக முதல் ஆளாக வெளிநடப்பு
இந்த நிலையில் சென்னையில்தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தவெக, ஆம் ஆத்மி, விசிக,நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக என மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 13 ஆக இருக்கும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காததால் 12 கட்சிகள் கலந்துகொண்டன.
அப்போது கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தப்பட்டது. மேலும் அவர் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்த தவெக முதல் ஆளாக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த செயல் திமுகவுக்கும், அதிமுகவும் ஷாக் கொடுத்துள்ளது. அதன் பிறகு தான் திமுக, அதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
புறக்கணித்த கட்சிகள்
1. திமுக
2. காங்கிரஸ்
3. தவெக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விசிக
7. நாம் தமிழர்
8. ஆம் ஆத்மி
9. தேமுதிக
இதில் 9 கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, அதிமுக மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) ஆகிய மூன்று கட்சிகள் பங்கேற்றுள்ளன.
திமுக -அதிமுக இடையே அண்டர்கவுண்ட் டிலீங்?
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஜெயக்குமார்தலைமையிலான அதிமுக நிர்வாகிகளும், திமுக நிர்வாகிகளும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசி கைகுலுக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து திமுக -அதிமுக இடையே அண்டர்கவுண்ட் டிலீங் நடப்பதாக தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியது போல் உள்ளது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக இரு கட்சிகளுக்கும் இடையேயான இணக்கமான சூழல், அரசியல் ரீதியான நெருக்கமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.
குழப்பமான சூழ்நிலையில் அதிமுக
எனினும், கூட்டத்தில் தேர்தல் ஆணையரைக் கண்டித்து பரந்தாமன் தலைமையிலான திமுகவினர் மட்டும் வெளிநடப்பு செய்த போதிலும், அதிமுகவினர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய இந்த சந்திப்புகளும் அரசியல் நகர்வுகளும் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. மறுப்புறம் பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதால் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளது.
குறிப்பாக மத்திய அரசு ஆதரவு வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணியும், தமிழகத்தில் ஆளும் தவெக அரசை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் திமுகவுடன் இணக்கமான சூழலை கடைபிடித்து வருகிறது. இதனால், அதிமுக குழப்பமான சூழ்நிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
