சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை- பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்- திருமாவளவன் – thirumavalavan urges social justice student brigade established in schools for student akilan suicide for caste issue

கோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். பள்ளியில் மாணவருக்கு சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும் இதனால், கவலையடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் அகிலனுக்கு பள்ளியில் சாதிய ரீதியில் பாகுபாடு பார்க்கப்பட்டு, அவருக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமாவளவன் அறிக்கை

கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, “நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?” என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது. அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது.

அகிலனை காப்பாற்றி இருக்கலாம்

இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார். இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்

மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை. மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரை

ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டும். சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும். கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் ‘சமூகநீதி மாணவர் படையை’ பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டும்.

எதிர்கட்சியினர் வலியுறுத்தல்

மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் எதிர்கட்சியினர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்து வருகின்றனர். இப்போதும் பள்ளிகளில் சாதிய ரீதியாக மாணவர்கள் ஒதுக்கப்படுவது ஆபாத்தானது எனவும் கூறியுள்ளனர். எனவே அரசு பள்ளிகளில் சாதிய வன்கொடுமைகள் மற்றும் சாதி காரணம் காட்டி மாணவர்கள் ஒதுக்கப்படுவதை தடுக்க உரிய முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

வானதி சீனிவாசன்

வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கி உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை, நன்னெறிக் கல்விக்கும் தனியாகப் பாடவேளைகளை ஒதுக்கிக் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோனை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- உதயநிதி

இந்தச்சூழலில், கழகம் – முற்போக்கு அமைப்புகள் – மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link