Lakshmi Narayan Yog Horoscope,ஐப்பசி பௌர்ணமி 2026: லட்சுமி நாராயண யோகத்தால் சுப காரியங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய ராசிகள் – aippasi purnima 2026: zodiac signs that may see auspicious family events and new career opportunities under lakshmi narayan yoga

சிவபெருமானுக்கு அன்ன அபிஷேகம் நடக்கக்கூடிய ஐப்பசி மாத பௌர்ணமி நாளானா  அக் 25 ஆம் தேதி, துலாம் ராசி ஏற்கனவே  உருவாக்கியுள்ள லட்சுமி நாராயண யோகம், மேலும் அற்புதமான பலன்களை பெற உள்ளது. யோகத்தின் காரணமாக எந்தெந்த ராசிகள் சாதகமான பலன்கள் பெறுவார்கள்? யாருக்கெல்லாம் வருமானத்தை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும் என தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தின்படி சில கிரகங்களின் சேர்க்கை மிக முக்கியத்துவம் வாய்ந்த யோக பலன்களை தரக்கூடியதாக அமையும். அந்த விதத்தில் 2026 அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை புதன் மற்றும் சுக்கிரன் உனக்கு எங்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடிய லட்சுமி நாராயண ராஜயோகம் பலருக்கும் சுப பலன்களை பார்க்க கூடியதாக இருக்கும். குறிப்பாக அன்றைய தினம் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் படி அளக்கக்கூடிய ஐப்பசி பவுர்ணமி அன்ன அபிஷேகம் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு நேர்மையான மாற்றங்கள் ஏற்படும்.

மேஷ ராசி

நண்பர்களுக்கு இந்த காலம் மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த காலம் வருமானத்தை அதிகரிக்க கூடியதாகவும், தொழில் துறையில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். வேலை தொடர்பாக பணியிடத்தில் புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டியது இருக்கும். தொழிலை தொடங்குவதற்கு அல்லது திட்டங்களை விரிவு படுத்துவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். நீதி முன்னேற்றங்களை அடையும் விதமான புதிய வழிகளை ஆராய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் நல்லுறவு பேணுவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியும் காண்பீர்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய வருமான ஆதாயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத விதத்தில் சில லாபமும், நல்ல செய்திகளும் தேடிவரும். நமக்காக நிலவில் இருக்கக்கூடிய திட்டங்களையும் முடிக்க முடியும். முதலீடு விஷயங்களில் அவசர முடிவு எடுப்பது தவிர்க்கவும். வேலையாக இருந்தாலும் முதலீடாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் இந்த லட்சுமி நாராயண யோகம் பலவிதத்தில் முன்னேற்ற பலனை தரக்கூடியதாக அமையும். கடின உழைப்பிற்கான அற்புத பலனை பெறுவீர்கள்.

கன்னி ராசி

அன்பர்களுக்கு இந்த காலத்தில் உங்களுடைய தைரியம் அதிகரிக்கும். தனஸ்தானத்தில் ஏற்படக்கூடிய இந்த அற்புத யோகம் நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்கவும், வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளையும் கண்டுபிடிப்பீர்கள். தொழில் முனைவோருக்கு ஏற்ற காலமாக இருக்கும். அதனால் கூடிய திட்டங்கள் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருக்கும்.

திருமணம் அல்லது காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்களுடைய உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் செயல்பாடு மனமகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசியில் உருவாக்கக்கூடிய லட்சுமி நாராயண யோகம் உங்களுடைய நிதி நிலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில், புதிய உயரத்தை அடைய உதவும். உங்களின் தொழில் வாழ்க்கையில் புதிய விஷயங்களை செயல்படுத்தவும், முதலீடு செய்யும் விஷயங்களில் கவனமாக மற்றும் நிதானத்தை கடைபிடிக்க முடியும்.

லாபத்தை அதிகரிக்கும் விதமான உங்களுடைய வணிக நடவடிக்கைகளில் முன்னேற்றம் அடையும். நாட்களாக தடைப்பட்டு கிடைக்கக்கூடிய வேலைகளை திட்டமிட்டால் முடிக்க முடியும். குடும்பத்தினருடன் அனுசரித்த செல்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மேலும் திருமணம் அல்லது குழந்தை பேறு போன்ற சில நல்ல விஷயங்கள் நடக்கும்.

மகர ராசி

மகர ராசி சேர்ந்த நண்பர்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பான முன்னேற்றத்தை தரும் காலமாக அமையும். பணியிடத்திலும் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதாரணமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். தொழில் முனைவோர் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும், ஒப்பந்தங்களைப் பெறவும் வாய்ப்புகள் உண்டு. வீடு, வாகனம் அல்லது சொத்து விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும். இந்த காலத்தில் உங்களுடைய திட்டங்கள் எதிர்பார்த்த பலனை தரக்கூடியதாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த யோகமானது உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படுகிறது. அதன் புதிய திட்டங்கள் மற்றும் புதிய நபர்களின் தொடர்பு தொடர்புகளால் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும். பணியிடத்தில் உங்களுக்கான வேலைகள் மற்றும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்று உயிர்கள்.

​தொழில் முனைவோருக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வணிகத்தை விரிவாக்குவது தொடர்பான வாய்ப்புகள் சாத்தியப்படும். பணம் தொடர்பான விஷயங்களையும் உங்களுடைய திட்டமிட்ட செயல்பாடு அவசியம். குடும்பத்தினர்களுடன் நல்ல உறவு மேம்படுங்கள். எதிர்கால திட்டங்களை தெளிவாக வைத்து செயல்படுவது முன்னேற்றத்தை தரும்.
குறிப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் தீர்வுகள், ஜோதிட மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. இவற்றை நம்பிக்கை மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ளவும். தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் முழுமையான தகவல்களுக்கு, ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.

Source link