கந்த சஷ்டி விரதம் 2026 : முருகனின் அருளை பெற ஒவ்வொரு நாளிலும் எப்படி விரதம் இருக்க வேண்டும் தெரியுமா?

கந்தசஷ்டி விரத முறைகள் :

முருகன் அருள் பெறும், மிக உன்னதமான ஆறு நாள் விரதம், கந்த சஷ்டி விரதம். மாதந்தோறும் சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டாலும், ஐப்பசி மாதத்தில் வரும் மகாகந்தசஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவது, பல மடங்கு அதிகமாகவும், விரைவாகவும் பலனை தரும் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கந்தசஷ்டி விரதத்தை பலரும் பல விதமாக, தங்களுக்கு வசதியான முறைகளில் கடைபிடிப்பது உண்டு. 48 நாள் எனப்படும் ஒரு மண்டல விரதம், 21 நாள் விரதம், 11 நாள் விரதம் என நீண்ட நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். இது எதுவும் முடியாதவர்கள் கந்த சஷ்டி விழாவின் ஆறு அல்லது ஏழு நாட்கள் விரதம் இருப்பார்கள். சிலர் சூரசம்ஹாரம் வரை ஆறு நாட்களும், இன்னும் சிலர் மறுநாள் திருக்கல்யாணம் வரையிலான ஏழு நாட்களும் கந்தசஷ்டி விரதம் கடைபிடிப்பது உண்டு. வேறு சிலர் சூரசம்ஹாரம் அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது உண்டு.

விரதம் இருப்பவர்கள் சிலர் மாலை அணிந்தும், சிலர் காப்பு கட்டியும், சிலர் கோவிலுக்கு சென்று தங்கியும் விரதம் இருப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்த படியே முருகனை நினைத்து விரதம் இருப்பது உண்டு.இந்த முறைகளில் யாருக்கு எது வசதியோ அந்த முறையில் விரதம் இருக்கலாம். உணவு ஏதும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது தான் விரதம் இருப்பது என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கந்தசஷ்டியின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமாக விரதம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. கந்தசஷ்டியின் முதல் நாள் துவங்கி, கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளிலும் எந்தெந்த முறையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கந்தசஷ்டி பொதுவான விரத முறை :

– அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும்

– முருகன் படம் அல்லது சிலை முன் விளக்கேற்றிவும்

– முருகனுக்கு பூக்கள் சாத்தி வழிபடவும்

– நெற்றியில் திருநீறு அணிந்து, முருகனின் திருநாமங்களை சொல்லியபடி இருக்க வேண்டும்.

– கந்த சஷ்டி கவசம் பாராயணம்

– முருகன் பாடல்கள் பாட வேண்டும்

– கோவில் தரிசனம்

– வேல் வழிபாடு

– முருகனிடம் வேண்டுதலை சொல்லி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

– தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு, பால் பழம் மட்டும் சாப்பிட்டு, ஒரு வேளை எளிய சைவ உணவு சாப்பிட்டு என உடல்நிலைக்கு ஏற்ற முறையில் விரதம் கடைபிடிக்கலாம்.

கந்தசஷ்டி ஒவ்வொரு நாளிலும் விரதம் இருக்கும் முறை :

கந்தசஷ்டி விரதம் முதல் நாள் – நவம்பர் 10 :

– காலையில் குளித்து விரத சங்கல்பம்

– முருகன் வழிபாடு

– கந்த சஷ்டி கவசம் பாராயணம்

– அபிஷேகம்/ கோவில் தரிசனம்

– பால், பழம். இளநீர், பழச்சாறு உணவு எடுத்துக் கொள்ளலாம்.

கந்தசஷ்டி விரதம் 2ம் நாள் – நவம்பர் 11 :

– கந்த சஷ்டி கவசம் பாராயணம்

– முருகன் நாம ஜபம்

– மாலை கோவில் தரிசனம்

– முருகன் வேல் நாம ஜபம்

– பழம், இளநீர், பழச்சாறு சாப்பிடலாம்.

கந்தசஷ்டி விரதம் 3ம் நாள் – நவம்பர் 12:

– கந்தசஷ்டி கவசம் பாராயணம்

– 108 முறை “ஓம் சரவண பவ” உச்சரிப்பு

– மாலை கோவில் தரிசனம்

– பழங்கள், பால் சாப்பிடலாம்.

கந்தசஷ்டி விரதம் 4ம் நாள் – நவம்பர் 13:

– கந்தசஷ்டி கவசம் பாராயணம்

– திருப்புகழ் பாராயணம்

– முருகன் பாடல்கள் பாராயணம்

– முருகனை நினைத்து தியானம் செய்தல்

– எளிய சைவ உணவு எடுத்துக் கொள்ளலாம்.

கந்தசஷ்டி விரதம் 5ம் நாள்- நவம்பர் 14:

– கந்தசஷ்டி கவசம் பாராயணம்

– திருப்புகழ் பாராயணம்

– ஓம் சரவண பவ ஜபம்

– வேல் வழிபாடு

– ஒரு வேளை மட்டும் சைவ உணவு எடுத்துக் கொள்ளலாம்.

கந்தசஷ்டி விரதம் 6ம் நாள் (சூரசம்ஹாரம்) – நவம்பர் 15:

– அதிகாலையில் எழுந்து விரதம் துவங்குதல்

– கோவில் தரிசனம்

– சூரசம்ஹாரசம் தரிசனம்

– மாலை தீபாராதனை தரிசனம்

– மாலை பூஜைக்கு பிறகு பால், பழம், இளநபர் சாப்பிடலாம்.

கந்தசஷ்டி விரதம் 7ம் நாள் (திருக்கல்யாணம்) – நவம்பர் 16:

– முருகன் திருக்கல்யாண தரிசனம்

– கோவில் தரிசனம்

– நிவேதனம், பிரசாதம் படைத்து வழிபடுதல்

– சாதாரண சைவ உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள் :

– மனஅமைதி

– வெற்றி, தைரியம்

– குடும்ப நலம்

– குழந்தை பாக்கியம்

– கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை

– ஆன்மீக முன்னேற்றம்

– வேண்டுதல்கள் நிறைவேறும்

– துன்பங்கள் நீங்கும்

Source link