மதுரையில் மேடையிலேயே தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த அமைச்சர் ஆனந்த்! – minister anand struggles to control sleep on stage during madurai rain review meeting

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை உள்ளிட்ட 15 தென் மாவட்டங்களுக்கான 3-வது மண்டல பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த முக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் என். ஆனந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேடையிலேயே சொக்கிய அமைச்சர்

நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தின் நடுவே, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஆனந்த் திடீரென தீராத அசதி காரணமாக கண் அயரத் தொடங்கினார். தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் மிகவும் தவித்த காட்சிகள் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகின.

ஒருபுறம் அதிகாரிகள் பருவமழை தயாரிப்புகள் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் அமைச்சர் ஆனந்த் தனது பாரமான இமைகளைத் தூக்க முடியாமல் சில நொடிகள் சொக்கி விழுவதும், பின்னர் திடுக்கிட்டு சுதாரித்துக் கொள்வதுமாக இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்

அமைச்சர் தூக்கத்துடன் போராடும் இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களிடையே கலவையான விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் “அதிகாரிகள் கூட்டத்தில் இப்படியா தூங்குவது?” என விமர்சித்தாலும், பலரோ “கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், இரவு முழுவதும் களத்தில் நின்று அமைச்சர் பணிகளை மேற்பார்வையிட்டிருக்கலாம், அந்த உடல் சோர்வு காரணமாகவே அவர் சோர்வடைந்திருப்பார், அவரும் மனிதர்தானே!” என அமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இருப்பினும், மழைக்கால அவசர சூழலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Source link