தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு? நள்ளிரவு கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களை பட்டியலிட்ட உதயநிதி! – udhayanidhi stalin slams tvk government over law and order collapse in tamil nadu

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் தொடர் கொலை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரை அ.தி.மு.க. மற்றும் பிற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தி.மு.க.வின் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தற்போதைய அரசை “Sofa Model ஆட்சி” என்றும், முதலமைச்சரை “Dummy CM” என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

சாத்தான்குளம் நள்ளிரவு கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் கணவரும் மகனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களை அந்த மர்ம கும்பல் கடத்திச் சென்றதாகவும், சில மணி நேரத் தேடலுக்குப் பின்னரே அவர்கள் மீட்கப்பட்டதாகவும் உதயநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுமிகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள்

தமிழகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்குச் சான்றாக அண்மையில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்: வேளாங்கண்ணி கொடூரம்: வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம். திருநெல்வேலி கூட்டுப் பாலாத்த்காரம்: திருநெல்வேலியில் வீட்டை விட்டு வெளியேறிய மற்றொரு சிறுமிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தவெக பிரமுகர் அத்துமீறல்: கன்னியாகுமரி மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு.

உதயநிதி எக்ஸ் பதிவு

விவரம் பின்வருமாறு,
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.

ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா?
ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்?
இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு.

Source link