டி20 உலகக்கோப்பை: கனடாவுக்கு கடினமான இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

அகமதாபாத்,

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – கனடா மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கனடா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் 59 ரன்கள், டிகாக் 25 ரன்கள், ரையான் ரிகல்டன் 33 ரன்கள், டேவிட் மில்லர் 39 ரன்கள், ஸ்டப்ஸ் 34 ரன்களை குவித்தனர்.

கனடா தரப்பில் அந்த அணியின் அனுஷ் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கனடா 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. கனடா வெற்றிபெற 12 ஓவர்களில் இன்னும் 150 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link