அதிகாலை 2 முறை கேட்ட அழுகுரல்: செஞ்சி சிறுமி வழக்கில் வெளியான பகீர் தகவல்? என்னதான் ஆனது – a cry of amma heard twice at dawn what happened in the gingee girl missing case

தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த 11ஆம் தேதி செஞ்சியில் சிறுமி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை அவர் கிடைக்காத நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது.

என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சேர்ந்தவடிவேலுமற்றும் பவானி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹேமலதா என்ற சிறுமியைத்தான் காணவில்லை.

சிறுமி காணாமல் போனதற்கு முந்தைய நாள் இரவு, ஹேமலதாவுக்கு குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மேலும், ஹேமலதாவின் தாய்தான் அவரைத் தூங்க வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் காணாமல் போயிருக்கிறார்.

அதிகாலையில் கேட்ட அழுகுரல்

அனைவரும் உறங்கச் சென்றபோது, வீட்டின் தாழ்ப்பாளைப் போடாமலேயே தூங்கியிருக்கின்றனர். இந்தச் சூழலில், அதிகாலை நேரத்தில் வீட்டின் வெளியே, “அம்மா, அம்மா” என அழுகுரல் கேட்டதாக எதிர் வீட்டைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் உடனடியாக வெளியே சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை எனச் சொல்லப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்: தீவிர தேடுதல் வேட்டை

அதிகாலை 6 மணிக்கு பவானி எழுந்து பார்த்தபோது, அருகில் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில், அருகில் இருக்கக்கூடிய விவசாயக் கிணறுகள், வயல்வெளிகள் எனப் பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடியும் இதுவரை ஹேமலதாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

டெல்லியில் அண்ணாமலை செய்த செயல்! இது யாருக்கும் தெரியாது! – kalyan raman

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்கு

அதோடு மட்டுமல்லாது, தொலைபேசித் தடயங்களை வைத்து 15-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Source link