தமிழகத்தில் 31-ந்தேதிக்குள் சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை

தமிழகத்தில் 31-ந் தேதிக்குள் சொத்து விவரங்களை பதிவிட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் பொறுப்பு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசாணை

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ன் விதி 7(3)-ன்படி, அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை மனிதவள மேம்பாட்டுத்துறையின் ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் மேற்கண்ட அனைத்து அதிகாரிகளும் தங்களது ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். அடையாள எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, களஞ்சியம் செயலியில் உரிய சொத்து விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தவறாமல் பதிவிட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source link