மலை மாவட்டங்களில் கனமழை: நிலச்சரிவு ஏற்படுமா? செவ்வாய்க்கிழமை வரை உஷார் – தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங் – heavy rain forecast in hill districts landslide risk caution advised until tuesday by tn weatherman

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மழை நிலவரம் எப்படி இருக்கும் எனச் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரையிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதன் பிறகு மழைக்கு இடைவெளி ஏற்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.

மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில், மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. கேரளாவுக்கு அருகே அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்போது, அடுத்த மூன்று நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூர், நீலகிரி, கொடைக்கானலில் நிலச்சரிவு?

குன்னூர் மலைப்பகுதி, நீலகிரியின் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொடைக்கானல் மற்றும் மாஞ்சோலை பகுதிகள் ஆகிய மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கித் திறந்திருக்கக்கூடிய பள்ளத்தாக்குகள் அதிக ஆபத்தான இடங்களாகப் பார்க்கப்படுகின்றன. கனமழை பெய்தால், இப்பகுதிகளில் நிலச்சரிவு, மண்சரிவுமற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயமும் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

நாளைக்கு இந்தியாவே Trend ஆக போகும் முதல்வரின் டெல்லி விசிட்! | Exclusive |

தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்

ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் என இருவேறு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதனால் முதல் சுற்று வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது என டெல்டா வெதர்மேன் அறிவித்திருந்தார்.

Source link