IND A vs NZ A Test – ஜெய்ஷ்வால், ராகுல், படிக்கல் அடித்த ரன் இதுதான்: முதல் இன்னிங்ஸ் முடிந்தது – india a team first innings score against new zealand team in 1st test match

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணி, முதல் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இந்திய அணியில், எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்ஷன் போன்றவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓபனர்களாக யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் இருந்தனர். இதில், கே.எல்.ராகுல், 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. மேலும், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், 45 பந்தில் 17 ரன்னைதான் சேர்த்தார்.

இப்படி, ஓபனர்கள் சொதப்பி ஆட்டமிழந்தப் பிறகு, தேவ்தத் படிக்கல், 77 பந்தில் 5 பவுண்டரி, உட்பட 32 ரன்களை எடுத்தார். இவர், நல்ல பார்மில் இருக்கும் நிலையில், செட்டில் ஆனப் பிறகும், 32 ரன்களை மட்டும் அடித்து அவுட் ஆனது, அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

பிறகு, 4ஆவது இடத்தில் ஆடிய சாய் சுதர்ஷன், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 13 பந்தில் ரன்களை எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மேலும், கேப்டன் துரூவ் ஜோரலும் 1 (13) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இப்படி, இந்திய அணி, தடுமாறி வந்த நிலையில,் இறுதிக் கட்டத்தில், இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், யாஷ் ரதோட் 49 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 44 ரன்களை அடித்தார்.

இதனால்தான், இந்திய அணியால் 100+ ரன்களை எட்ட முடிந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், 0 (6), அன்சுர் கம்போஜ் 10 (13) ஆகியோரும் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. இதனால், இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 113/10 ரன்களை மட்டும் அடித்து, படுமோசமாக சொதப்பியது.

நியூசிலாந்து பௌலர், சிமோன் கீன் 11.3 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஜாக் கிப்சன், 10 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

இந்திய அணிக்கு பிரச்சினை: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன் போன்ற பேட்டர்கள், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்டில், படுமோசமாக சொதப்பியிருப்பது, இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இனி, அடுத்தடுத்த டெஸ்ட் இன்னிங்ஸில், இந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 5 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடர், இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு அரையிறுதிப் போட்டி மாதிரி அமைந்துள்ளது.

Source link