சுற்றுலாத் தலங்கள் திடீர் மூடல்: கன்னியாகுமரியில் எந்தெந்த இடங்களுக்குச் செல்ல தடை? – tourist spots in kanyakumari temporarily closed following heavy rain alert

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு கடை கோடி மூலையில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கன்னியாகுமரி அமைந்திருக்கிறது. விவேகானந்தர் பாறை, திற்பரப்பு கிராமத்தில் உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சி , கன்னியாகுமரியின் அழகான கடற்பகுதிகள் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளமாக விளங்குகிறது.

நான் தமிழகம் முழுக்க பருவமழை தீவிரமடைந்திருக்கிறது மேலும் தென் மாவட்டங்கள் பலவற்றிற்கும் அதிகளவு மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்க கூடிய சூழலில் கன்னியாகுமரியின் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

ஏற்கெனவே உருவாகியுள்ள இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளில் ஒன்று அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. கேரளாவுக்கு அருகே இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வருவதால், அது எந்த நேரத்திலும் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சூழல் நிலவுவதாலும், கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் கவனக்க வேண்டியவை:

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு முன்பு, அவை திறக்கப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.திற்பரப்பு நீர்வீழ்ச்சி, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source link