வனுவாட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

போர்ட் விலா,

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான வனுவாட்டு தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 8.01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வனுவாட்டு தீவுகளில் 20 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 14.098 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 165.493 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து, வனுவாட்டு அதிகாரிகள் ஆரம்பத்தில் கடலோர மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Source link