Sarathkumar About Aadhav Arjuna,அனைத்தையும் அரசியலாக்க கூடாது..ஆதவ் அர்ஜுனாவிற்கு அட்வைஸ் செய்த பாஜக நிர்வாகி சரத்குமார் – sarathkumar advice to aadhav arjuna regarding on hi criticisms towards bjp

தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரையில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்திருக்கின்றது. இதனால் மிகப்பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது. தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு பாஜகவை குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு பாஜகவை சேர்ந்தவர்களும் பதிலளித்து வருகின்றனர். இதற்கும் பாஜக அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவையில்லாமல் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டும். இருந்தாலும் இதுபோன்ற செயல்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

படத்தை கசியவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் தான் காரணம் என கூறியிருக்கின்றார். இதற்கு பாஜக சார்பாக பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகி சரத்குமார் தனது கருத்துக்களை கூறியிருக்கின்றார்.

ஆதவ் அர்ஜுனா அனைத்தையும் அரசியலாக்க பார்க்கின்றார். இந்த குற்றத்தை செய்தவர்களை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். ஆனால் இதை அரசியலாக்க கூடாது, என் படமான ஜக்குபாய் கூட இணையத்தில் கசிந்தது. அதனால் பலகோடி நஷ்டம் எனக்கு ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சி தான் நடந்துகொண்டு இருந்தது. அந்த சமயத்தில் திமுககட்சியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். அதற்கான என் படம் இணையத்தில் கசிந்ததற்கு திமுக தான் காரணம் என நான் சொல்லவில்லை.

எனவே இந்த குற்றத்தை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் இதை வைத்து அரசியல் ஆதாயம் காணக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. எதை எடுத்தாலும், தவெகவிற்கு எந்த பிரச்சனை வந்தாலும் அனைத்திற்கும் அரசு தான் காரணம் என்கின்றனர். இதையெல்லாம் விட்டுவிட்டு மக்களுக்கு செய்யப்போகும் திட்டங்களை கூறி, கொள்கை மற்றும் கோட்பாடுகளை எடுத்துரைத்து அரசியல் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார் சரத்குமார்.

இவ்வாறு ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு பாஜக அரசும் காரணம் என சொன்ன ஆதவ் அர்ஜுனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் சரத்குமார். இந்நிலையில் தவெகவின் ஆதவ் அர்ஜுனாகருத்துக்கள் தொடர்ந்து பேசும்பொருளாக மாறி வருகின்றது. அவர் பதிவு செய்யும் கருத்துக்கள் சில சமயங்களில் சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது. இதையெல்லாம் விஜய் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது தான் பொதுவான கருத்தாக இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தவெகவினர் தங்களது பரப்புரையில் தொடர்ந்து திமுக அரசையும் பாஜக அரசையும் தான் குறை கூறி வருகின்றார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்காக செய்யப்போகும் திட்டங்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை என்ற விமர்சனங்களும் உண்டு. தொடர்ந்து திமுக அரசை வெகுவாக விமர்சித்து பேசி வரும் தவெகவினர் அதனை குறைத்துக்கொண்டு தங்களின் கொள்கை கோட்பாடுகளையும் திட்டங்களையும் அதிகமாக எடுத்துரைத்து முன்னிறுத்தி பேசினால் கண்டிப்பாக சிறப்பாக இருக்குமே என்பது பெரும்பாலானோரின் கருத்தாகவும் அறிவுரையாகவும் இருக்கின்றது.

என்னதான் திமுக தான் தங்களது அரசியல் எதிரி ,பாஜக கொள்கை எதிரி என விஜய் சொன்னாலும் அதற்காக தொடர்ந்து அவர்களை விமர்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் திமுக மற்றும் பாஜக செய்தும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசித்தான் ஆகவேண்டும். பாஜக தரப்பினர் மட்டுமல்லாமல் திமுக மற்றும் காங்கிரஸ்கூட்டணியை சேர்ந்தவர்களும் இதே கருத்தை தான் கூறுகின்றனர்.

தொடர்ந்து எங்களை விமர்சனம் செய்து அவதூறு பரப்பி பரப்புரை செய்கின்றனர் என கூறி வருகின்றனர். எனவே விமர்சனங்களை குறைத்து கொள்கைகளை திட்டங்களை முன்னிறுத்தி தவெகவினர் பேசவேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link