திமுக புகார் எதிரொலி..! லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிப்பு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. எனவே முக்கிய முடிவுகளை உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்து வருகிறது..

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.. மேலும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை அடுத்து தேர்தல் ஆணையம் மாற்றியது.. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்வார் என்றும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. டி.ஆர் பாலு கடிதம் அளித்ததை தொடர்ந்து அதிகாரி மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.. எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை நியமித்ததாக திமுக எம்.பி டி.ஆர் பாலு குற்றம்சாட்டி இருந்தார். ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக தன்னைக் காட்டி கொள்பவர் சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என டி.ஆர். பாலு தனது புகாரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link