அம்மாவை முதல்வராக எடப்பாடி பழனிசாமி நான் நடித்த பலரும் முயன்றோம். அதிமுக முயற்சியை ஆதரித்தால் பாஜகவை ஆதரிப்பதாக மாறிவிடும் என கம்யூனிஸ்டுகள் பின்வாங்கினார்கள். திமுக ஆதரவை நாங்கள் கேட்கவில்லை என மே எட்டாம் தேதியே சொன்னேன். தமிழக வெற்றிக்கழகத்தால் ஆகும் அதிமுக எம்எல்ஏக்கள் திருடப்படுவதை தடுக்கவே நாங்கள் இவ்வாறு செய்தோம். திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது; அது பொய் பரப்புரை என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. ஆனாலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்பதால் திமுகவின் ஆதரவு சக்திகளான காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம்களுக்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோரியது.
கடந்த மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே பத்தாம் தேதி தான் தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
அரசியல் சர்ச்சை
இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சையான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. விஜயை பதவி ஏற்க விடக்கூடாது என்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைந்து திருமாவளவனை முதல்வராக திட்டமிட்டதாக தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. திருமாவளவன் அதை ஒரு தனியார் செய்தி ஊடக நிகழ்வில் ஒப்புக்கொண்டு, ஆனால் மக்கள் தீர்ப்பை மதித்து நான் இந்த முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈகோ மோதல்?
மேலும், விஜய் முதல்வராவதில் உதய்க்கும் எடப்பாடி பழனிச்சாமிமகன் மிதுனுக்கும் இருந்த ஈகோ மோதல் தான் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு காரணம் என பேச்சுக்கள் எழுந்த சூழலில், இடதுசாரிகள் இந்த முடிவிலிருந்து பின்வாங்கி இருப்பதாக தினகரன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், திருமாவளவனை முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் நானும் முயற்சித்தோம் என அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் சூழலில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
