குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு குரு 4ம் ஸ்தானத்திற்கு நகர்கிறார். இதனால் ரிஷப ராசியினர் குடும்ப விவகாரம், நிதிநிலை, ஆரோக்கியம், வேலை தொழிலில் எப்படிப்பட்ட பாதகமான பலன்களை சந்திப்பார்கள். எதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி 2026 :
கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க கூடிய குரு பகவான் யாரும் அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குருவின் அமைப்பு ரிஷப ராசிக்கு பெரிய அளவில் சாதக பலன்களை தராத நிலை இருக்கும். குரு பகவான் அக்டோபர் 31 முதல் 2027 ஜனவரி 25 வரை சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்வார். இந்த காலத்தில் குடும்ப விவகாரம், ஆரோக்கியம், வேலை தொழில் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
குடும்ப விவகாரம்
குருவின் பெயர்ச்சியானது குடும்ப விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். பெற்றோரின் உடல் நலம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். பரம்பரை சொத்து போன்ற விஷயங்களில் தகராறுகள் எழலாம். உங்கள் வாழ்க்கை துணையையும், குடும்ப உறவுகளையும் மனசு எடுத்துச் செல்ல வேண்டிய காலம். திருமணம் முயற்சியில் இருக்க கூடிய இளைஞர்களுக்கு சற்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தினரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு குறைவாகவே கிடைக்கும்.
ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
ரிஷப ராசிக்கு 4ம் ஸ்தானத்திற்கு மாறக்கூடிய குரு, அசுபமான தாக்கங்களை தரப்படும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குருவின் அமைப்பதால் மார்பு, இதயம், வயிறு தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஏற்கனவே ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு இருந்தால், அவை மேலும் மோசம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த காலத்தில் சிறிய அளவில் உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டாலும் அவற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் மருத்துவரை அணுகுவது நன்மை தரும். வேலை அல்லது, சமூகத்தின் மூலம் மன அழுத்தத்தை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.
வரவு செலவு அதிகரிக்கும்
ரிஷப ராசிக்கு நிதிநிலை ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். உங்களுடைய வழக்கமான வருமானங்கள் கிடைப்பதில் சில இடையர்கள் சந்திக்க நேரிடும். சிலர் நிலம், வீடு போன்ற சொத்து தொடர்பான விஷயங்களுக்காக அதிக செலவு ஏற்படும். அதே சமயம் அதன் பராமரிப்பு தொடர்பாக செலவுகள் அதிகரிக்கலாம். பரம்பரை சொத்து விஷயங்களில் கருத்து வேறுபாடுகளும், தகராறுகள் சந்திக்க நேரிடும்.
கடன் கொடுப்பது அல்லது வாங்குவது தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மேலும் அபாயகரமான முதலீடுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
வேலை வியாபாரம் எப்படி இருக்கும்?
உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் குரு சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் ரிஷப ராசி நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் தொடர்பான விஷயங்கள் சற்று சாதகமற்ற நிலை ஏற்படலாம்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் உறவு பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. வேலை விவகாரங்களில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களுக்காக நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். அதனால் வேலை தொடர்பான விதிகளை சரியாக பின்பற்றவும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். பதவி உயர்வுக்கான காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எதிர்பாராத இடமாற்றத்தால் சிரமங்கள் ஏற்படலாம்.
தொழில், கல்வி
தொழில்
தொழில் செய்யக்கூடியவர்கள் சில முக்கியமான ஒப்பந்தங்கள் பெறுவது அல்லது முதலீடு தொடர்பாக அவசரப்பட வேண்டாம். உங்களின் தேவையற்ற செலவுகளை கவனித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மேலும் தொழில் கூட்டாளிகளிகளுடன் உறவை பராமரிக்க முயலவும்.
கல்விரிஷப ராசி சேர்ந்த மாணவர்கள் படிப்பு தொடர்புகளுக்கு கூடுதல் கவனமும் கடின உழைப்பும் தேவைப்படும். போட்டி தேர்வு எழுதக்கூடியவர்கள் சரியான திட்டமிட்டு படிப்பதும், கவனச் சிதரலை தடுப்பது அவசியம்.
