தமிழ் சினிமாவில் வாரிசுகள் நுழைவது புதிய விஷயமல்ல. ஆனால், விளம்பர உலகிலும் ஒரு வாரிசு தனது தந்தையின் சுவடுகளைப் பின்பற்றி தடம் பதிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படி ஒரு சுவாரசியமான வர்த்தகக் கூட்டணி தான் தற்போது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும், விளம்பர உலகிலும் பேசும் பொருளாக மாறியு
பிரபல சொகுசு நகை நிறுவனமான சல்லானி ஜுவல்லரி மார்ட் (Challani Jewellery Mart) தங்களது புதிய பிராண்ட் தூதராக (Brand Ambassador) இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்யை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
16 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை… இன்று மகன்!
இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் சட்டென்று நினைவுக்கு வந்தது 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணிதான். கடந்த 2010 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் முன்னணி நகைக்கடை பிராண்டான ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ (Jos Alukkas) நிறுவனத்தின் தூதராக முதன்முதலில் கமிட் ஆனார் தளபதி விஜய். அப்போது விஜய் நடித்த ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்கள் வெறும் நகைகளை விற்கும் விளம்பரமாக இல்லாமல், “இது தங்கமான உறவு” என்ற தாரக மந்திரத்தோடு, தந்தை-மகள் பாசம், குடும்ப உறவுகள் என எமோஷனலாக மக்களைக் கட்டிப்போட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அசுர வளர்ச்சி அடைவதற்கும், மக்களின் வீட்டுப் பிள்ளையாக விஜய் மாறுவதற்கும் அந்த விளம்பரங்கள் மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தன. இன்று, அதே பாணியில் தனது தந்தையைப் போலவே கார்ப்பரேட் விளம்பர உலகிற்குள் மாஸாக நுழைந்திருக்கிறார் அவரது மகன் ஜேசன் சஞ்சய்.
சல்லானி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) படத்தை இயக்கிய ஜேசன் சஞ்சய், தற்போதைய 2K கிட்ஸ் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் ஒரு ஸ்டைலிஷ் ஐகானாகப் பார்க்கப்படுகிறார். அடுத்த தலைமுறை நகை வாடிக்கையாளர்களை (Next-Gen Luxury Buyers) ஈர்க்க நினைத்த சல்லானி குரூப், அதற்கு ஜேசன் சஞ்சய் தான் சரியான சாய்ஸ் என அவரைத் தூதராக லாக் செய்துள்ளது. இதற்கான விளம்பரப் படப்பிடிப்புகளும் சென்னையில் மிக ரகசியமாக நடந்து முடிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் முகமாக நடிகை ராஷி கண்ணா இருக்கும் வேளையில், இப்போது ஜேசன் சஞ்சய்யும் இணைந்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாடும் ‘நாஸ்டால்ஜியா’
2010-ல் விஜய் எப்படி ஒரு நகைக்கடை விளம்பரம் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தாரோ, அதேபோல் 2026-ல் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சல்லானி ஜுவல்லரி விளம்பரம் மூலம் களமிறங்கியிருப்பது ரசிகர்களுக்கு ஒரு செம ‘நாஸ்டால்ஜியா’ உணர்வைத் தந்துள்ளது. “அப்பாவைப் போலவே மகனும் சரியான பாதையில் பயணிக்கிறார்” என சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பிராண்ட் மதிப்பை உயர்த்தும் வாரிசு காரணி
விளம்பர உலகத்தைப் பொறுத்தவரை ஒரு பிராண்டின் முகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். விஜய் அவர்கள் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்தபோது, அவரது எளிய குணமும், குடும்பப் பாங்கான பிம்பமும் அந்த பிராண்டிற்கு மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றுத் தந்தது. இன்று அதே ‘நம்பகத்தன்மை’ மற்றும் ‘மாஸ்’ காரணியை ஜேசன் சஞ்சய் தங்களுக்குக் கொண்டு வருவார் என சல்லானி நிறுவனம் நம்புகிறது. ஒரு நடிகராக இல்லாமல், இயக்குநராகத் தனது சொந்தத் திறமையால் வளர்ந்து வரும் சஞ்சய்யின் இந்த புதிய அவதாரம், சல்லானி நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை இந்திய அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
திரைத்துறையும் விளம்பர உலகமும்: சஞ்சய்யின் இரட்டைச் சவாரி!
தற்போது சிக்மாவான(Sigma) தனது முதல் படம் வெளியான நிலையில் விளம்பர உலகின் டாப் பிராண்டுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது ஒரு அரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. திரைப்பட இயக்கம் ஒருபுறம் இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர முகமாக அவர் மாறியிருப்பது அவரது பன்முகத்திறமையைக் காட்டுகிறது. தந்தை விஜய் எப்படித் தனது சினிமா வாழ்க்கையோடு விளம்பரப் பயணத்தையும் வெற்றிகரமாகக் கையாண்டாரோ, அதேபோல சஞ்சய்யும் சினிமா மற்றும் வணிக உலகம் என இரண்டிலும் ஒரே நேரத்தில் இரட்டைச் சவாரி செய்து தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார்.
வீடியோ
