பிரதமர் மோடி நாளை உ.பி., ஒடிசா பயணம்

டெல்லி,

பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

உ.பி. பயணம்

பிரதமர் மோடி நாளை 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி நாளை காலை உத்தரபிரதேசத்திற்கு செல்கிறார். அம்மாநிலத்தின் வாரணாசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து விமானப்படை சார்பில் நடைபெறும் சாகச நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். மேலும், உ.பி.யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ஒடிசா பயணம்

உத்தரபிரதேசத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி அன்றைய தினமே அங்கிருந்து உடனடியாக ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார். தலைநகர் புவனேஷ்வர் செல்லும் பிரதமர் மோடி அங்கு ரிசர்வ் வங்கியின் டேட்டா சென்டர் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறார். மேலும், ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி அன்றைய தினமே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Source link