கேரளாவில் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாஞ்சு சாம்சன்

பாலக்காடு மாவட்டம் முண்டூர் பகுதியில் உள்ள சாலையோர கடையில் சொகுசு கார் நின்றுகொண்டிருந்தது. இதனை பார்த்த இளைஞர்கள் சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நின்றுகொண்டிருந்தார்.

உடனே அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரது ரசிகரும், கிரிக்கெட் வீரருமான சபரீஷ் என்பவர் அருகில் சென்று, செல்பி எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அப்போது அவரது செல்போன் டிஸ்பிளே உடைந்திருந்ததை பார்த்த சஞ்சு சாம்சன், தனது காரில் இருந்த செல்போனை எடுத்து அவருக்கு பரிசாக கொடுத்தார்.

அதனை பெற்றுக்கொண்ட சபரீஷ், அந்த செல்போனில் சஞ்சு சாம்சனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். சஞ்சு சாம்சனின் திடீர் வருகை அந்த பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சஞ்சு சாம்சன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சஞ்சு சாம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link