செஞ்சி 7வயது சிறுமி காணாமல் போன விவகாரம் : அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன திடுக்கிடும் தகவல் – சூடுபிடிக்கும் விசாரணை – viluppuram gingee missing 7 years old hemalatha girl child case cbcid investigation minister nirmal kumar statement

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செகானூரணியில் சிதிலமடைந்திருந்த பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,செக்கானூரணி ஒரு முக்கியமான ஒரு பகுதி.மதுரை மாவட்டத்துல ஒரு முக்கியமான பகுதி. நூற்றுக்கணக்கான கிராமத்தை கனெக்ட் பண்ற ஒரு பகுதி. கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட பேருந்து நிலையத்துடைய பணிகள் சுணக்கமாக இருந்தது.. நம் முடைய ஆட்சி காலம் வந்த பிறகு முதலமைச்சருடைய உத்தரவுக்கு இணங்க, எதெல்லாம் தடைப்பட்டு இருந்ததோ அது அனைத்தையும் விரைவாக முடிக்கும் பணிகள் நடைபெற்று வருது.

​இதே மாதிரிதான் உசிலம்பட்டியில் இருக்கிற பேருந்து நிலையமும் முடிகிற நிலைமையில் அனைத்து பணிகளையும் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று செக்கானூரணி பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்து அதை திறந்து வைப்பதற்காக முதல்வருடைய உத்தரவுக்கு இணங்க திறந்து வைத்தோம்.இதை மேம்படுத்துவதற்கான தேவைகளையும் கேட்டறிந்து, அதையும் முதல்வரிடம் தெரிவித்து, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேலும் மேம்படுத்துவதற்காக கண்டிப்பாக சொல்லுவோம் என்றார்.

தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் அதிகமாக இருக்கு சார்… தொடர்ந்து மாதத்திற்கு 4 கொலை, 5 கொலைகள் நடப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில தேவையான கடுமையான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க உத்தரவிட்டுருக்கிறார். எல்லா இடத்திலும் எங்கெங்கெல்லாம் வந்து தவறு நடக்குதோ உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேங்கைவயல்ல எத்தனை நாள் கடந்த ஆட்சியில வந்து எஃப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணாம, ஒரு சொல்யூஷன் கிடைக்காம, எத்தனை தடவை சிபிசிஐடிக்கு மாத்தினாங்க. அந்த மாதிரி எதுவும் இல்ல. எந்தெந்த இடத்துல எல்லாம் தவறு நடக்கிறதோ, உடனடியாக யாரு தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

​எல்லா இடத்துலயும்… இப்ப நீங்க ஒரு குழந்தை செஞ்சியில காணாமல் போயிருக்கு ஒரு ஏழுக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, எல்லா இடத்துலயும் துரிதமாக தேடப்பட்டு வர்றாங்க. கண்டிப்பா அது வந்து காவல்துறையும் எல்லா ஆங்கிள்லயும் விசாரிச்சிட்டு வர்றாங்க. முழு முயற்சிகள் காவல்துறையின் சார்பாகவும் சட்டம்-ஒழுங்கை சரிசெய்வதற்கும் முதல்வரிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

​ 5 வருஷம் கெடுத்து வச்சிருந்த திமுகவுடைய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் இல்ல.போதைப்பொருள் கலாச்சாரத்தை நாம ஒழிப்பதற்கு கடுமையாக முயற்சிகள் எடுத்து முதலமைச்சர் உத்தரவுகள் வரப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருது. விரைவில எல்லாமே ஒவ்வொரு கட்டத்துலயும் ஒவ்வொண்ணும் சரிசெய்யப்படும். ஏன்னா ஸ்ட்ரீம்லைன் பண்றது, 5 வருஷம் சீர்கேடு செய்யப்பட்டதை ஸ்ட்ரீம்லைன் பண்றதுக்கு சில மாதங்கள் ஆகும். அதை செய்வதற்கான முயற்சிகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அரிசி தரம் பற்றிக் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு விமர்சனம் செய்பவர்கள் செஞ்சிட்டுதான் இருப்பாங்க. ஆனால் என்ன சொல்யூஷன்? மக்களுக்கு என்ன மாதிரியான சொல்யூஷன் கொடுக்க முடியும்? இப்ப வந்து விலைவாசி ஏறியிருக்கு. வேற இடத்துல இருந்து வாங்கி வரப்பட்டு சன்ன ரக அரிசிகள் எங்கெங்க கொடுக்க முடியும், ஏழை எளிய மக்களுக்கு எப்படி சொல்யூஷன் கொடுக்க முடியுமோ கண்டிப்பா உணவுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டு வருது.

விமர்சனம் செய்பவர்கள் எல்லாத்தையும் விமர்சனம் செஞ்சுட்டுதான் இருப்பாங்க. ஆனால் அதற்காக நாம செய்யாமல் இருக்காமல், மக்களுக்கான பணிகளை துரிதமாக செய்வோம் என்று கூறினார்.

Source link