இதுவே, பிற்காலத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் உருவாகவும் காரணமாக இருந்தன. அதே சமயம், பல முன்னணி நட்சத்திரங்கள் மக்களிடம் செல்வாக்கை பெற்றிருந்தாலும், தேர்தல் களம் என்று வரும் போது அதிர்ச்சி தோல்விகளை சந்திருக்கின்றனர். தற்போது, தனிக் கட்சி தொடங்கி, தேர்தல் வரை சென்று சாதாரண வேட்பாளரிடம் நடிகர்கள் யார் யார் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
சாதாரண வேட்பாளர்களிடம் தோல்விடையந்த பிரபலங்கள்
டி ஆர் ராஜேந்திர்
எம்ஜியார் சிவாஜி காலத்திலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் டி ஆர் ராஜேந்திர். இவரும் அரசியல் ஆசைக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை மதிக்கும் நடிகர் என்ற பெயர் பெற்ற இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். தீவிர கலைஞர் ஆதரவாளராக இருந்த இவர், அக்கட்சி சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1991 இல் அக்கட்சியில் இருந்து விலகி தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார். பின்னர் அதை கலைத்துவிட்டு லட்சிய திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை பூங்கா நகரில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை அதிமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எஸ். செல்வராஜ் தோற்கடித்தார்.
சிவாஜி கணேசன்
தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே திமுகவில் இருந்தவர். அதன் பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய கட்சி, காங்கிரஸ், ஜனதா தள் உள்ளிட்ட பல கட்சிகளில் பயணித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சொந்த கட்சி தொடங்க நினைத்த சிவாஜி கணேசன், 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அப்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த பலர் கட்சியில் இணைந்தனர். பின்னர், 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் தனது சொந்த கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரனிடம் தோல்வியடைந்தார்.
விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என நடத்தி பிரம்மாண்ட அரசியல் செய்த பெருமை இவரையே சாரும். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இந்த கட்சி, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இருப்பினும், 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவரானார். இவர் இருக்கும் வரை தேமுதிக ஆளும் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சியாக இருந்தது. அதன்பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். இவரை அதிமுக வேட்பாளர் இரா.குமரகுரு தோற்கடித்தார்.
சரத்குமார்
வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், 1996 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகிய சரத்குமார், தனது மனைவியுடன் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, 2016 சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட இவரை, திமுகவின் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் தோற்கடித்தார்.
கமல்ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்ட கமல்ஹாசனை ரசிகர்கள் உலகநாயகன் என்று அன்போடு அழைக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், 2021 தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த அவர், இறுதிச் சுற்றில், அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் தோல்விடையந்தார். இவர் கட்சி தொடங்கி இன்னும் அரசியலில் இருந்தாலும், தேர்தல் வெற்றிகளைப் பெற முடியாமல், 2026 தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும், கமல்ஹாசன் மாநிலங்களை எம்.பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
