இரட்டை இலை சின்னத்துக்கு ஒட்டு கேட்ட செங்கோட்டையன்.. சமாளிப்பதற்காக சொன்ன அந்த வார்த்தை.. கொந்தளிப்பில் தொண்டர்கள்.. – tvk sengottaiyan speech at sathyamangalam election campaign

அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக தேர்தல் களம் காண்கிறார் அதிமுகவின் மூத்த அரசியல்வாதியும், முன்னால் அமைச்சருமான செங்கோட்டையன் . இந்த நிலையில், வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தனி தொகுதி தவெக வேட்பாளர் தமிழ் செல்விக்கு ஆதரவாக சத்தியமங்கலம் பகுதியில் இன்று(ஏப்.11) வாகன பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று வழக்கமாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையே முன்வைத்திருந்தார். எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு இறுதியாக, தமிழக வெற்றி கழகத்துக்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

பழைய நினைவில் தவறுதலாக அதிமுக கட்சியின் சின்னத்துக்கு ஓட்டு போடும்படி கேட்டதை சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், ” இரட்டை இலை என்றே வாக்கு கேட்டு கேட்டு பழகிவிட்டேன். கோபிசெட்டிபாளையத்தில் சேகரிக்க செல்லும் பொழுது மூதாட்டி ஒருவர் உங்களுக்காக இரட்டை இலை சின்னத்திற்கே எப்போவும் போல வாக்களிப்போம் என்று கூறினார். இல்லை. நான் தற்போது விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் எனக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டேன் அதற்கு அவரும் நிச்சயம் உங்களுக்கு தான் எனது ஓட்டு என்று கூறினார்” என சமாளித்திருக்கிறார்.

தற்போது, இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெகுவாக பரவி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்கள், வேட்பாளர்கள் இப்படி மாற்று சின்னத்தில் வாக்கு கேட்பது புதியது கிடையாது.

செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்ல- எடப்பாடி பழனிசாமி பேட்டி

இதற்கு முன்பாக, தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொது செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, சென்னையின் தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுகதான் பெரிய அளவில் ஜெயிக்கும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். பிறகு, வாய் தவறி சொல்லிவிட்டதாக சமாளித்துவிட்டார்.

Source link