த்ரிஷா கிருஷ்ணன் : கோவையில் தனியார் கடை ஒன்றை திறந்து வைக்க வந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. த்ரிஷாவை பார்த்ததும் அவரின் தீவிர ரசிகர்களுக்கு முதலில் தெரிந்தது அவரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தான்.
அதாவது த்ரிஷா அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டார். எலும்பெல்லாம் தெரிகிறது. கொஞ்சம் நல்லா சாப்பிட்டு வெயிட் போடக் கூடாதா தலைவி என மாதக் கணக்கில் த்ரிஷாவிடம் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கோவையில் சிவப்பு நிற சேலை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து அழகுச் சிலையாக வந்த த்ரிஷா லைட்டாக வெயிட் போட்டிருக்கிறார். அவரின் கன்னம் ஒட்டிப் போய் பார்க்க பரிதாபமாக இல்லை.
மாறாக புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். இது தான் அவரின் ரசிகர்களை ஆனந்த கண்ணீர் விட வைத்திருக்கிறது. ஒரு வழியாக தலைவி பழையபடி ஆகிவிட்டார். தயவு செய்து மீண்டும் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட வேண்டாம். இதே வெயிட்டை மெயின்டெய்ன் செய்யுங்கள். நீங்கள் எப்பொழுதுமே குண்டாக இருந்தது இல்லை. அதனால் எடையை குறைக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள் சவுத் குயினின் தீவிர ரசிகர்கள்.
லண்டனில் இருந்தார்: பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் முதல் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா கிருஷ்ணன். அதற்காக அவர் லண்டனில் தங்கியிருந்தார். ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கி வரும் படத்தின் கதை த்ரிஷாவை சுற்றி தான் நகர்கிறது. இந்நிலையில் அந்த ஷூட்டிங்கில் இருந்து சென்னை திரும்பிய த்ரிஷா முகத்தில் ஏற்பட்டிருக்கும் நல்லவிதமான மாற்றம் அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
லண்டனில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் எல்லாம் நல்லதாக நடந்திருக்கும் போன்று. அதனால் தான் தலைவி ரொம்ப சந்தோஷமாக காணப்படுகிறார் என்று ரசிகர்கள் பேசுகிறார்கள்.
அரசியல் பேச்சு: கோவையில் த்ரிஷாவுக்கு கூடிய கூட்டத்தை பார்த்தவர்களோ இவர் அரசியலுக்கு வந்தால் பெரிய பதவியை பிடிப்பார் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த த்ரிஷாவிடம் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது லைட்டாக சிரித்துவிட்டு பதில் அளிக்காமல் சென்றார்.
சொன்னது இல்லை: நான் அரசியலுக்கு வருகிறேன் என த்ரிஷா கிருஷ்ணன் சொன்னது இல்லை. இருந்தாலும் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அரசியலுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அவ்வப்போது பேசப்படுகிறது. மேலும் விரைவில் பிரபல அரசியல் கட்சியில் சேரப் போகிறார் த்ரிஷா என வதந்திகள் பரவுகிறது. ஆனால் அதற்கு எல்லாம் த்ரிஷா பதில் அளிப்பது இல்லை.
முதல்வர் ஆசை: பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது நான் அரசியலுக்கு சென்று இன்னும் 10 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஆகணும் என்றார் த்ரிஷா. அவர் விளையாட்டாக சொன்னதை தான் தற்போது சீரியஸாக எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
த்ரிஷாவின் சினிமா கெரியர் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக த்ரிஷாவை தேடி வருகிறது. அவரும் அதில் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷாவுக்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா, அதை பார்த்துவிட மாட்டோமா என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
Source link
