இன்டர்போலின் 8 கலர் குறியீடுகள் சொல்வது என்ன? Blue Notice-ஆல் லண்டனில் சிக்கும் பிரகாஷ் கண்ணையா – types of interpol color codes with london prakash kannaiah blue notice in gem veeramani case

லண்டனில் வசிப்பதாக சொல்லப்படும் பிரகாஷ் கண்ணையா குறித்த தகவல்களை பெறும் நோக்கில் களத்தில் இறங்கியுள்ளது சிறப்பு புலனாய்வு பிரிவு. இவர் ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சூழலில் இன்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கில் நாள்தோறும் புதிய அப்டேட்கள் வெளிவந்து கலங்க வைத்து வருகிறது. சிறுமிகளை சீரழித்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்று சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் பிரகாஷ் கண்ணையா என்ற தொழிலதிபரின் பெயர் அடிபடுகிறது. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர். ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவின் நட்பு வட்டத்தில் இருப்பவர் என்கின்றனர்.

யார் இந்த பிரகாஷ் கண்ணையா?

இந்த வழக்கில் இதுவரை கிடைத்த தகவல்களின் படி, தான் செய்த தவறுகள் என்னென்ன, இதன்மூலம் தனக்கிருக்கும் சிக்கல்கள் என்ன, தனது வீடியோக்களை வைத்து சாந்தி என்பவர் மிரட்டுகிறார் போன்ற விவரங்களை மகளிடம் ஜெம் வீரமணி கூறியுள்ளார். அப்போது தனது தந்தையை காப்பாற்ற பிரகாஷ் கண்ணையாவை மகள் அர்ச்சனா சந்தித்து பேசியிருக்கிறார். இவர் மூலமாக அதிகாரிகள், அரசியல் தலைவர்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்வதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் தான் பிரகாஷ் கண்ணையா எங்கிருக்கிறார் என்று போலீசார் தேட ஆரம்பிக்கின்றனர்.

சம்பவம் செய்த TVK Warriors! அம்பலமான தொழிலதிபர் வீரமணி

வீரமணி கொடுத்த ரூ.100 கோடி: லண்டனில் தலைமறைவு

அதில் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. விசாரணை தன் பக்கம் திரும்பலாம் என்று தெரிந்து முன்கூட்டியே தப்பி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவரை பிடித்து விசாரித்தால் ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் பணம் கைமாற்றம், உதவி செய்த காவல்துறை அதிகாரிகள், தலையிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தெரிய வரும்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தனது சொத்துகளை விற்று சுமார் 100 கோடி ரூபாய் மற்றும் 24 கிலோ தங்கத்தை பிரகாஷ் கண்ணையாவிற்கு வழங்கியிருக்கிறார்.

ப்ளூ நோட்டீஸ் கொடுத்த இன்டர்போல்

இந்த பணம் மற்றும் நகைகள் என்ன ஆனது? பேரம் பேச யாருக்காவது வழங்கினாரா? இல்லை தானே பதுக்கி கொண்டாரா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய விசாரித்தால் தான் உண்மைகள் தெரிய வரும். வெளிநாட்டில் இருப்பதால் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையின் உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளனர். இதையொட்டி ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் வழங்கும் நோட்டீஸ்கள் என்னென்ன?

ரெட் நோட்டீஸ்: கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான நோட்டீஸ். எல்லோ நோட்டீஸ்: காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்கும் வகையில் அளிக்கப்படும் நோட்டீஸ். ப்ளூ நோட்டீஸ்: சம்பந்தப்பட்ட நபர் வேறு நாட்டில் வசிக்கிறார் என்றால், அவரை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வகையில் அளிக்கப்படும் நோட்டீஸ் பிளாக் நோட்டீஸ்: அடையாளம் தெரியாத நபர்கள், உடல்கள் தொடர்பான தகவல்களை பெறும் வகையில் அளிக்கும் நோட்டிஸ் கிரீன் நோட்டீஸ்: குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், மற்ற நாடுகளிலும் சென்று குற்றங்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதை உணர்த்து வகையில் அளிக்கப்படும் நோட்டீஸ் ஆரஞ்சு நோட்டீஸ்: ஒரு நபர் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்ற தகவலை வழங்கும். பர்பிள் நோட்டீஸ்: குற்றவாளிகள் பயன்படுத்தும் புதிய முறைகள், கருவிகள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து மற்ற நாடுகளுக்கு உதவுவது. சில்வர் நோட்டீஸ்: குற்ற செயல்கள் மூலம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சொத்துகள் எங்குள்ள என கண்டறிய உதவுகிறது.

Source link