தமிழக வெற்றி கழக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அடுத்த திருவான்மையூரில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் கே .கே. எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்திய பின்னர் நிகழ்ச்சியில் தமிழகத்தில் நிலவிவரும் தற்போதைய ஆட்சி நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து பேசினார்.அவர் பேசியிருப்பதாவது: தமிழகத்தில் மக்கள் சந்தித்து வரும் அன்றாட துயரங்களை சந்தித்து வருகின்றன மாநிலத்தில் ஒருபுறம்மின் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் தற்போது நிம்மதியை இழந்து தவிக்கும் சூழலில் இன்றைக்கு நிலவுகிறது என்று குற்றம் சாட்டினார்.
சிங்கப்பெண் படை குறித்த விமர்சனம்
பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண்’ என்ற ஒரு சிறப்புப் படையை உருவாக்கினார்கள். ஆனால், கள நிலவரம் என்னவென்றால், அந்த சிங்கப்பெண் படையையே காப்பாற்றுவதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டிய அவல நிலைதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று சாடினார்.
போட்டி யாருக்கு இடையே?
தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சராகப் பொறுப்பில் இருப்பவர் மேடைகளில் பேசும்போது, இரு பெரும் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என்று கூறுகிறார். ஆனால் நான் சில நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டேன். போட்டி என்பது மின்வெட்டுக்கும் அறிவாலயத்திற்கும் இடையேதான் என்று. இன்றோ நிலைமை அதையும் தாண்டிவிட்டது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என்ற அளவிற்குச் சட்டம்–ஒழுங்கு தலைகீழாக மாறியுள்ளதுஎன்றார்.
தீய சக்தி என்று புலம்பும் முதல்வர்
முதலமைச்சராக உள்ளவர் மேடைக்கு மேடை ‘தீய சக்தி, தீய சக்தி’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அந்தத் தீய சக்தி யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மிகத் தெளிவாக உணர்ந்துள்ளனர். இந்த ஆட்சிக்கு வாக்களிக்காத மக்கள் மட்டுமல்ல, இவர்களை நம்பி வாக்களித்த மக்களே இன்று புலம்பக்கூடிய மிக மோசமான சூழல்தான் காணப்படுகிறது என்று விமர்சித்தார்.
சீர்குலைந்த சட்டம் – ஒழுங்கு
மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் தினந்தோறும் பத்திரிகைகள், தொலைக்காட்சிச் செய்திகள், சமூக வலைதளங்கள் என எதைப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், குழந்தைகள் கடத்தல் போன்ற செய்திகள் இல்லாத நாளே இல்லை. நிர்வாகச் சீர்கேட்டால் தமிழ்நாடு முழுவதும் சீரழிந்து போயுள்ளது எனக் கவலை தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகுங்கள்
ஆட்சியின் ஆயுட்காலம் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி இன்னும் ஆறு மாதங்களாவது நீடிக்குமா என்று நான் தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால், அந்த ஆறு மாதங்களைக்கூடத் தாங்க முடியாத மிக மோசமான நிலையில்தான் ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்பட உள்ளது; அதற்குத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மணமக்களுக்கு வாழ்த்து
இறுதியாக, இல்லத்தினரைப் பாராட்டிப் பேசிய மு.க.ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மருமகனான மருத்துவர் அருண்குமார் தன் குடும்பத்தின் பெரும் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வதையும், மருத்துவத் துறையில் ஆற்றி வரும் சிறப்பான பணிகளையும் நினைவுகூர்ந்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளான வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டராக மணமக்கள் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.
Source link
