திரை உலகில் நடிப்பு அரக்கன் என்று புகழ் பெற்ற நடிகர் தனுஷ் தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் இறங்கி வேகம் காட்டி வருவது சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய உள்ளது .அண்மையில் அவர் மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் மற்றும் அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அரசியலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போலவே இத்தனை காலம் வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களம் இறங்க முழு வீச்சில் ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. இதன் முதற்கட்டமாக எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து செயல்பட அவர் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் ‘ரெட் சிக்னல்’
இதற்காக அதிமுக மேலிடத்தில் இருந்து தனுஷ் தரப்பில் முக்கிய பொறுப்பான இணை பொது செயலாளர் பதவியை கேட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. ஆனால், எடுத்து எடுப்பிலேயே இத்தகைய உயர் பதவியை வழங்க முடியாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து ரெட் சிக்னல் காட்டியுள்ளார். தனுஷை அதிமுகவில் இணைக்க டெல்லி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும் எடப்பாடி பழனிசாமிஏற்க மறுத்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
டெல்லி விசிட் – பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை?
அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு கதவை அடைத்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவசர அவசரமாக டெல்லி விசிட் அடித்ததாக கூறப்படுகிறது. அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியதாகவும் டெல்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது .அதிமுகவுடன் மீண்டும் பேசி பார்ப்பதா? அல்லது தனி கட்சி தொடங்குவதால் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது .அண்மையில் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட போது அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கிளம்பும் யோகங்களை இந்த டெல்லி பயணம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.
வரலாற்றுப் பாதையா? விஜய் பார்முலாவா?
தமிழக அரசியலைப் பொறுத்தவரைஎம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், டி ராஜேந்தர் ,சரத்குமார், பாக்யராஜ்போன்றோர் ஏற்கனவே இருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் செயல்பட்டு பின்னரே தனி கட்சியை தொடங்கினர். குறிப்பாக நீண்ட கால அரசியல் அனுபவத்திற்கு பிறகு எம்ஜிஆர் ஆட்சிபிடித்தார். மாறாக விஜயகாந்த் கமலஹாசன் மற்றும் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப்பிடித்த முதல்வர் விஜய் போன்றோர் எந்த ஒரு கட்சியிலும் சேராமல் நேரடியாக தனி கட்சி தொடங்கினர். முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோதே மக்கள் இயக்கம் மூலமாக நலத்திட்ட உதவிகள் நீட் தேர்வு ஜல்லிக்கட்டு மீனவர் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தார். ஆனால் அசுரன் கர்ணன் போன்ற படங்களில் சமூக அவலங்களை எதிர்த்து நடிகர் தனுஷ் நிஜ வாழ்க்கையில் எந்தவித சமகால பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்ததில்லை என்ற விமர்சனமும் உள்ளது.
முழுநேர அரசியலா? ‘பார்ட் டைம்’ அரசியலா?
தற்போது தனுஷ் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் போல சினிமாவிற்கு முழுமையாக முட்டுக்கட்டை போட தனுஷால் உடனடியாக முடியாது. அதே நேரம் திரையுலகை விடாமல் அரசியலில் ஈடுபட்டால் கமலஹாசன் பாணியில் பாட்டை அரசியல்வாதியாக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்து கதையாகிவிடும் என்ற அச்சமும் உள்ளது. இதனால் ஆந்திராவில் பவன் கல்யாண் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே துணை முதலமைச்சர் ஆனது போல தனுஷும் அதே பார்முலாவை தமிழக அரசியல் களத்தில் கையில் எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
பொதுவாகவே ஆன்மிக ஈடுபாடு கொண்ட தனுஷின் சிந்தனைகள் வலதுசாரிகள் சார்புடையதாக பார்க்கப்படுகிறது எனும் டெல்லியின் ஆர்வத்தோடு தமிழகத்தில் களத்தில் இறங்கத் துடிக்கும் தனுஷ் அரசியல் பயணம் வெற்றி பிரகாசமாக அமையுமா? அல்லது கடுமையான சவால்களை சந்திக்குமா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரிந்துவிடும்.தமிழக அரசியல் களத்தில் திமுகவை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக திட்டமிட்டு வரும் நிலையில் அதனை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கையில் விஜயின் பலத்தை குறைப்பதற்காகவே தனுஷை சூசகமாக அரசியல் களத்தில் இறக்குவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து நடிகர் தனுஷ் வாய் திறந்தால் மட்டுமே அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Source link
