வங்கக்கடலில் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!

சென்னை,

ஒரே இடத்தில் நகராமல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக நாளை (திங்கட்கிழமை) உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து 880 கி.மீ. தொலைவில் தென் கிழக்கே தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. முன்னதாக காலை 5.30 மணி நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருந்தது.

இதனிடையே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் கனமழை, பலத்த சூறாவளிக் காற்றுக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source link