பிக் பாஸ்ல இருந்து ஷாமா வெளியேற்றம்: இனி ஜேசனை கையிலேயே புடிக்க முடியாதே

ஷாமா கிளம்பினார்: பிக் பாஸ் 10 வீட்டில் இருந்து இன்று முத்தழகி தான் வெளியேற்றப்படுவார் என்றே அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் நம்பினார்கள். ஷாமா, முத்தழகி, அக்ஷிதா, அஷ்மிதா ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருந்தார்கள். நாம் ரொம்ப ஸ்டிராங்கான போட்டியாளர் என நம்பி வந்ததார் ஷாமா. அதனால் தான் உங்களின் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை உங்களுக்காக பயன்படுத்தப் போகிறீர்களா என தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணன் கேட்டபோது இப்போ இல்லை என்று ரொம்பவே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஷாமா ஏன் பாஸை வீணடிக்க வேண்டும் என்றே நாமும் நினைத்தோம். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக ஷாமாவை தான் வெளியேற்றிவிட்டார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை தனக்காக பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டிலேயே இருந்திருப்பார் ஷாமா.

அஷ்மிதா அளவுக்கு நாம் ஒன்றும் சும்மா இல்லை. அவரே இருக்கும்போது நம்மை ஏன் வெளியேற்றப் போகிறார்கள் என இருந்துவிட்டார் போன்று. இந்நிலையில் அஷ்மிதாலாம் என்ன செய்தார் என அவரை வாரம் தோறும் காப்பாற்றுகிறீர்கள் பிக் பாஸ் என பார்வையாளர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜேசன், வாசன்: உங்களுக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்களை டேஞ்சர் ஜோனில் உள்ள நான்கு பேரில் யாருக்காவது கொடுக்கிறீர்களா என ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசனிடம் ரம்யா கிருஷ்ணன் கேட்டார். இரண்டு பேருமே சொல்லி வைத்தது போன்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அதெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

ஷாமா மட்டுமே: தன் உயரத்தை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு சக போட்டியாளர்கள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை காட்டி மிரட்டி அவர்களை ஆஃப் செய்து விடுகிறார் ஜேசன் என்கிற புகார் உண்டு. ஆனால் அவர் என்ன தான் மிரட்டினாலும் அமைதியாகாத ஒரே பெண் போட்டியாளர் ஷாமா மட்டும் தான். ஜேசன் கத்தினால் பதிலுக்கு ஷாமாவும் கத்துவார், தட்டிக் கேட்பார். இருவரும் கத்தினால் நிகழ்ச்சியை பார்க்கும் நம் காதில் ஒரு வலி ஏற்படுவது தனிக்கதை.

இந்த ஷாமாவை மட்டும் மிரட்ட முடியவில்லையே, என்ன செய்யலாம் என ஜேசன் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அவரை வெளியேற்றிவிட்டார்கள். இனி ஜேசனை தட்டிக் கேட்க எந்த பெண் போட்டியாளரும் இல்லை. அதனால் ஜேசனுக்கு ஒரே ஜாலி தான்.

மகிழ்ச்சியும், வருத்தமும்: ஷாமா வெளியேற்றப்பட்டதை பார்த்து பிக் பாஸ் பார்வையாளர்கள் இருவிதமாக ரியாக்ட் செய்கிறார்கள். சிலரோ, அப்பாடா இனி இந்த கொசு தொல்லை இருக்காது. காதுக்குள்ள கத்திக்கிட்டே இருக்க மாட்டார். நீங்கள் எங்களை கடுப்பேற்றியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை ஷாமா. அதனால் தான் பிக் பாஸ் உங்களை கிளம்ப வைத்துவிட்டார்கள் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இந்த உயர்ந்த மனிதன் ஜேசனை வந்து பார் என்ற ஒரே ஆளும் போய்விட்டார். நீங்கள் கிளம்பிவிட்டாலும் வின்னர் தான் ஷாமா. அந்த வீட்டில் இருந்தவரை டஃப் போட்டியாளராக இருந்தீர்கள். ஜேசன் மட்டும் அல்ல முனியம்மாவுக்கும் ஷாமாவை பார்த்தால் தான் லைட்டா பயம். இனி அவர்கள் இருவரும் நிம்மதியாக அடுத்தவர்களை வம்பிழுப்பார்கள் என மேலும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Source link