4 வைட்ஸ், 24 ரன்கள்… ஐபிஎல் கெரியரில் அர்ஷ்தீப் சிங்கின் மோசமான ஓவர்

முல்லான்பூர்,

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஐபிஎல் கெரியரிலேயே மிகவும் மோசமான ஓவரை வீசியுள்ளார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது 3வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 4 வைட்கள் உட்பட மொத்தம் 24 ரன்களை வாரி வழங்கினார். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப்பின் இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதனால் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் அர்ஷ்தீப், லைன் மற்றும் லெங்க்தை இழந்தார்.

Also Read
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி: ஷ்ரேயாஸ் அய்யர் கூறியது என்ன ?
4 வைட்ஸ், 24 ரன்கள்… ஐபிஎல் கெரியரில் அர்ஷ்தீப் சிங்கின் மோசமான ஓவர்

இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் 50 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Source link