CSK – ஷிவம் துபேவை வாங்க, 3 அணிகள் கடும் போட்டி: இதில், சிஎஸ்கே, ஒரு அணியுடன் தீவிர பேச்சு வார்த்தை – chennai super kings want to trade shivam dube three teams interested

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐபிஎல் 2027 சீசனுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக, அணியில் இருக்கும் குறையை சரி செய்ய, சில அதிரடி முடிவுகளை எடுக்க, தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பெரிய குறை. இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாததுதான். இந்த குறையை போக்க, டிரேடிங்கில் ஒரு வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. இந்நிலையில், இந்த குறையை போக்க, ஷிவம் துபேவை டிரேடிங் செய்து, மாற்றாக ஒரு இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, முதலில் குஜராத் டைடன்ஸ் அணி நிர்வாகத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை கொடுக்க வேண்டும் என குஜராத் டைடன்ஸிடம் சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. துபே, கிடைப்பதால், இந்த டிரேடிங் விஷயத்தில், குஜராத் டைடன்ஸும் ஆர்வமாக இருக்கிறதாம்.

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகிகளும், சென்னை சூப்பர் கிங்ஸை தொடர்புகொண்டு, ஷிவம் துபேவை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ அணி, துபேவுக்கு மாற்றாக ஆயுஷ் படோனி மற்றும் ஷாபஸ் அகமதுவை கொடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இது சிஎஸ்கேவுக்கு, ஓரளவுக்கு நல்ல டீலிங் தான்.

ஐபிஎலில், 40 போட்டிகளில் பேட்டிங் ஆடி, 20 சராசரியில், 123.30 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடித்துள்ளார். இதில், ஒரு அரை சதமும் அடங்கும்.

பந்துவீச்சில், 27 விக்கெட்களை எடுத்துள்ளார். 9.80 என்ற எகனாமி இருக்கிறது. இருப்பினும், கூடுதலாக, ஆயுஷ் படோனியை கொடுப்பது, சிஎஸ்கேவுக்கு நல்ல விஷயம்தான். சர்பரஸ் கானுக்கு மாற்றாக விளையாட வைக்க முடியும்.

மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும், ஷிவம் துபேவை வாங்க தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. ஷிவம் துபேவுக்காக அசுதோஷ் சர்மா மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரை விடுவிக்க முன் வந்துள்ளனர். இதில், நிதிஷ் ராணா, ஓரளவுக்கு சிறந்த ஆல்ரவுண்டர்தான். ஆனால், அசுதோஷ் சர்மா என்ற பினிஷர் கூடுதலாக கிடைப்பது, சிஎஸ்கேவுக்கு நல்ல டீல்தான்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கண் அனைத்தும், குஜராத் டைடன்ஸ் அணி மீதுதான் இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் இருவரில் ஒருவரை, எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள்.

இந்த இருவரும், இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணியில் ஆடுவதுதான் சிறந்த முடிவாக இருக்கும். அப்படி பார்த்தால், சிஎஸ்கேதான், இந்த இருவருக்கும் சிறந்த அணியாக இருக்கிறது. இதில், சாய் கிஷோர், நிச்சயம் குஜராத் டைடன்ஸைவிட்டு வெளியேற வேண்டும். அவருக்கு, அங்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், அவரே, குஜராத் டைடன்ஸுக்கு அழுத்தம் கொடுத்து, அணியைவிட்டு வெளியேறுவதுதான் சிறந்தது.

சாய் கிஷோர் மட்டும், கடந்த இரண்டு சீசன்களிலும் தொடர்ச்சியாக விளையாடியிருந்தால், இன்று வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக, சாய் கிஷோர்தான் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

Source link