தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 1 வரை மழைக்கு வாய்ப்பில்லை – தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் – tamil nadu weatherman update no rain expected in tamil nadu from oct 27tth to november 1st

புயலால் தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 1 வரை மழைக்கு வாய்ப்பில்லை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதுகுறித்து காண்போம்.

தமிழகக் கடற்கரை மற்றும் வடக்கு இலங்கை கடல் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது நிலவுகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இன்றைய மழைக்கான வாய்ப்புள்ள பகுதிகள்

தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழைக்கு இடைவெளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மாலை முதல் மழையின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வடக்கு இலங்கையில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை ஏமாற்றிய மழை

முன்னதாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை – புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தெற்கு நோக்கி நகர்ந்து டெல்டா மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் சென்றுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை முற்றிலும் கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 1 வரை வறண்ட வானிலை

நாளை நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. அர்னாப் புயல் கிழக்குத் திசைக் காற்றைத் தன்னுடன் இழுத்துச் செல்வதால், தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து, மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

ஆரஞ்சு அலர்ட்

கனமழை காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்

மஞ்சள அலரட்

திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

10 மணி வரை தொடரும் மழை

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை வரை 10 மணி வ்ரை கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Source link