வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்: தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்குமா? முழு விவரம் இதோ – cyclone arnab bay of bengal tamil nadu rainfall forecast weather update

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்க்கு பருவமழை கடந்த அக். 15 ஆம் தேதி தொடங்கியது.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை , திருச்சி , மதுரை, நிலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், குடியிறுப்பு பகுதிகள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்

இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ (Arnab) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயலின் நகர்வு, அதன் தீவிரம் மற்றும் தமிழக வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வடியாத வெள்ளம் : சென்னை எப்படி சமாளிக்கிறது?

வலுவடைந்துள்ளது இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாகவும், அதனைத் தொடர்ந்து மிக தீவிர புயலாகவும் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் இந்த புயல், வரும் அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை வேளையில் விசாகப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு உள்ளதா?

அர்னாப்’ புயலால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான நேரடிப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அதேவேளையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை ஒட்டி நீடித்து வரும் வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, இன்று பகல் வேளையில் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்.

மழை குறையும் – வறண்ட வானிலை

இன்று மாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். கடந்த ஒரு வார காலமாகத் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பதிவாகி வந்த நிலையில், இன்று இரவு முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப்பொழிவு வெகுவாகக் குறைந்து ஒரு வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வடகிழக்குப் பருவமழையின் அடுத்தகட்ட நகர்வாக, நவம்பர் 1-ஆம் தேதி முதல் பருவமழையின் இரண்டாம் சுற்று மழை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் நிலைகொண்டுள்ளதால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படும்[6]. மணிக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர அர்னாப்’ புயல் எப்போது கரையை கடக்கும்?

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, ‘அர்னாப்’ புயல் அக்டோபர் 28 மதியத்திற்குள் காக்கிநாடா – ஏனாம் இடையே 115-125 கி.மீ வேகத்தில் கரையை கடக்கக்கூடும் என்பதால் ஏனாம் நிர்வாகம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Source link