தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்கள், விதவைகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மெகா திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசுக்குச் சொந்தமான நிலங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டி, குறைந்த விலையிலும் வாடகை அடிப்படையிலும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, சிறப்பான வடிவமைப்பு, பலமான கட்டுமானம் மற்றும் குறைந்த செலவிலான உள்கட்டமைப்பை உறுதிசெய்யக் கட்டடக்கலை ஆலோசகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கியுள்ளது.
புரசைவாக்கம் (சென்னை):
சென்னையின் மையப்பகுதியான புரசைவாக்கத்தில், வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 5.53 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 300 உயர்தரக் குடியிருப்புகள்கட்டப்படவுள்ளன. நகரின் மையத்தில் அமையவுள்ள இக்குடியிருப்புகள் நடுத்தர மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
நெற்குன்றம் (சென்னை):
சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள 3.35 ஏக்கர் நிலத்தில் 228 பன்னடுக்குக் குடியிருப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
கூத்தம்பாக்கம் (திருவள்ளூர்):
திருவள்ளூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் பகுதியில் 1.20 ஏக்கர் நிலப்பரப்பில் 112 பன்னடுக்கு வீடுகள் கட்டப்படவுள்ளன. இது புறநகர்ப் பகுதி மக்களுக்குப் பெரிதும் உதவும்.
ஓமந்தூரார் அரசு தோட்டம் (சென்னை):
ஓமந்தூரார் அரசு வளாகத்தில் TNGRHS திட்டத்தின் கீழ் 76 வாடகைக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இவை அரசு ஊழியர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும்.
அமைந்தகரை மற்றும் திருவள்ளூர் பகுதிகள்:
அமைந்தகரை, தாரம்பாக்கம், சோழம்பேடு மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக (EWS) 149 + 66 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவை முற்றிலும் ஏழைகள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.
தொழில்நுட்ப ஆலோசனைகளும் பாதுகாப்பும்
வீடுகளைப் பாதுகாப்பாகவும் வலுவாகவும் கட்டுதல், குறைந்த செலவில் அதிக வீடுகளை உருவாக்குதல் மற்றும்குடிநீர், மின்சாரம், கழிப்பறைஉள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி வழங்குதல் ஆகியவற்றை உறுதிசெய்யவே தகுதியான ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இத்திட்டம் கட்டுமான நிறுவனங்களுக்கும் ஆலோசகர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும், விதவைகளுக்கும் புதிய நம்பிக்கையையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் சந்தேகமில்லை.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்
குடும்பத்தில் யாருடைய பெயரிலும் சொந்த வீடு இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (BPL) பட்டியல் அல்லது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பிய தகுதியான நபர்கள் உரிய அடையாளச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள், 2, 3 அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்துவோர், ₹50,000-க்கு மேல் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், வீட்டில் ஃபிரிட்ஜ், லேண்ட்லைன் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் 2.5 ஏக்கருக்கு மேல் பாசன நிலம் உள்ளவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
மானிய விவரங்கள் மற்றும் கடன் சலுகைகள்
ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வட்டி மானியமும், அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரை மானியத் தொகையும் 5 வருடத் தவணைகளில் வழங்கப்படும். ரூ.12 லட்சம் கடன் பெற்றால், PMAY மானியத் தொகையான ரூ.2.3 லட்சம் கழிக்கப்பட்டு மீதமுள்ள ரூ.9.7 லட்சத்திற்கு மட்டும் EMI செலுத்தினால் போதுமானது. ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் நடுத்தரக் குடும்பங்களுக்குச் சமீபத்திய அறிவிப்பின்படி ரூ.18 லட்சம் வரையிலான கடனுக்கும் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய பயனாளிகள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனிலோ அல்லது நேரடியாக வங்கி மற்றும் அரசு மையங்கள் மூலமாக ஆஃப்லைனிலோ ஆவணங்களைச் சமர்ப்பித்து இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Source link
