சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் பல்லோவ் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் விக்டர் 61-வது நிமிடத்திலும், பிரான்சிஸ்கோ 78-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
