நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடி அவர்களின் மறைந்த தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்தை ஒன்றை கூறியுள்ளார். அது தற்போது இந்திய அரசியல் சூழலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும கார்கே உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜகவின் இந்திய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில நிர்வாகிகள் என பலர் கார்கேக்கு கண்டம் தெரிவித்து வருகின்றார். அவ்வகையில் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நயினார் அறிக்கை
தொடர் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாமல், எங்கள் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு கடும் கண்டனங்கள் என தெரிவித்துள்ள அவர், நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துள்ளார்.
அநாகரிக அரசியலின் உச்சம்
நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் அடித்து விரட்டப்படும் காங்கிரஸ் கட்சி, தனது ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் எங்கள் தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அநாகரிக அரசியலின் உச்சம். அதிலும் காங்கிரஸ் கட்சியிலேயே வயதில் மிகவும் மூத்தவரான திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், நாட்டு பிரதமரின் குடும்பத்தார் மீது இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அக்கட்சியின் வளர்ப்பைத் தான் காட்டுகிறது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் மோடியின் குடும்பம்
மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர்ந்திருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்களை, தேநீர் விற்றவர் என்றார்கள், குடும்பம் இல்லாதவர் என்றார்கள், தாயை பழித்தார்கள் இன்று அவரது தந்தையையும் இகழ்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் “மோடியின் குடும்பம்” என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது போல. இந்த கீழ்த்தரமான அரசியலுக்காகத் தான் மக்கள் காங்கிரஸை வெறுக்கிறார்கள் என்பது இன்னும் கூட புரியவில்லை போல என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதிலும் போராட்டம்
பிரதமர் குறித்து நாவடக்கம் இன்றி பேசிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்பதை மீண்டுமொரு முறை வலியுறுத்துகிறேன். இல்லையேல் தமிழ்நாடு மாநில பாஜக சார்பாக மாநிலம் முழுவதிலும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகவே விடுக்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கார்கே என்ன பேசினார்
பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ் ஐ ஆர் குறுபடி விவகாரம் குறித்து பேசிய கார்கே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகவேண்டும், மற்றும் இந்திய பிரதமர் மற்றும் பாஜக மத்திய அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என பேசியனார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது,’ என்று கூறினார். உடனே அவரை காங்கிரஸ் தொண்டர்கள் அங்கிருந்து வெளியேற்றினர். இதைக் கேட்ட கார்கே, ‘மோடியின் தந்தை வந்தாலும் தோற்கடிக்கப்படுவார்,’ என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Source link
