ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகளின் திருமணம் வெளிநாட்டில் நல்லபடியாக நடந்தது. அந்த திருமண புகைப்படங்களில் மூத்த மருமகன் உமாபதி ராமையா இல்லாதது சினிமா ரசிகர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது.
அர்ஜுன் மகள் அஞ்சனாவின் காதல் திருமணத்தில் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி ராமையா கலந்து கொள்ளாதது ஏன் என சினிமா ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
அஞ்சனா அர்ஜுன் திருமணம்
அர்ஜுன் தன் மகள்கள் ஐஸ்வர்யா, அஞ்சனாவுக்கு அப்பாவாக மட்டும் அல்ல நல்ல நண்பராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இளைய மகள் அஞ்சனாவுக்கு அவர் ஆசைப்பட்டது போன்று அவரின் காதலரான ஐசையா நட்டருடன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். இத்தாலியில் உள்ள டஸ்கனியில் கிறிஸ்தவ மதம் மற்றும் இந்து முறைப்படி என இரண்டு முறை திருமணம் நடந்தது. திருணமத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஞ்சனாவும், அர்ஜுனும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
உமாபதி ராமையா
அஞ்சனாவின் திருமணத்தில் அக்கா ஐஸ்வர்யாவின் காதல் கணவரான உமாபதி ராமையா கலந்து கொள்ளவில்லை. புகைப்படங்களில் மூத்த மருமகன் இல்லையே. இது அர்ஜுன் வீட்டு கடைசி திருமணமாச்சே. இதில் ஏன் உமாபதி கலந்து கொள்ளவில்லை?. ஐஸ்வர்யாவுக்கும், கணவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள். மச்சினி திருமணத்தில் உமாபதி பங்கேற்காமல் போனதற்கு நிச்சயம் காரணம் இருக்கும். அதை அவர்களே தெரிவிக்கும் முன்பு ரசிகர்கள் வேறு மாதிரியாக யூகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஐசையா நட்டர்
அஞ்சனா அர்ஜுனும், ஐசையாவும் ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் அல்ல 14 ஆண்டுகள் காதலித்து தற்போது கணவன், மனைவியாக ஆகியிருக்கிறார்கள். இந்த நாளுக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தது ஒர்த் என்கிறார் அஞ்சனா. கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்தில் அஞ்சனா அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் வெள்ளை நிற உடை அவருக்கு மிகவும் அழகாக இருந்தது. மோதிரம் மாற்றிக் கொண்ட பிறகு பிரமாண்ட கேக் வெட்டி தங்கள் திருமணத்தை கொண்டாடினார்கள் அவர்கள்.
இந்து திருமணம்
இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் ஐசையா மட்டும் அல்ல அவரின் குடும்பத்தாரும் இந்திய பாரம்பரிய உடை அணிந்தார்கள். தன் காதலி அஞ்சனா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார் ஐசையா. அதன் பிறகு மணமக்களுடன் அர்ஜுன், அவரின் மனைவி மற்றும் ஐஸ்வர்யா சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஐசையா குடும்ப ஆண்கள் பட்டு வேட்டி, சட்டையும், பெண்கள் சேலையும் அணிந்து கலக்கலாக போஸ் கொடுத்திருந்தார்கள்.
நிச்சயம், திருமணம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
2 மருமகன்கள்
அர்ஜுன் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக். இந்நிலையில் மருமகன்கள் உமாபதி மற்றும் ஐசையா நட்டரும் செம ஃபிட்டான ஆட்களாக இருக்கிறார்கள். அப்பாவை எப்பொழுதும் ஃபிட்டாக பார்த்து வளர்ந்ததால் மகள்கள் ஃபிட்டாக இருக்கும் ஆட்களை தங்கள் கணவராக தேர்வு செய்திருக்கிறார்கள் போன்று என அர்ஜுன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மாமனாரை விட இரண்டு மருமகன்களும் நல்ல உயரம். ஐஸ்வர்யாவுக்கு மட்டும் அல்ல அஞ்சனாவுக்கும் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டார் அர்ஜுன்.
