பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்!

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

அடுத்தடுத்து நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.

இதனையடுத்து, பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.15 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

77 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.849 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.767 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Source link