அண்ணாமலை, சிவகார்த்திகேயன் : செய்தி வாசிப்பாளர்கள் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன். அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. பழைய படங்களை ரீமேக் செய்வது சாதாரண விஷயம் தான். இந்நிலையில் எந்த பட ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள் என சிவகார்த்திகயேனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. நீங்கள் கேட்பதால் யோசித்து சொல்ல வேண்டுமெனில் அண்ணாமலை ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ரீமேக் உரிமை குறித்து பேசிவிடுகிறேன். இயக்குநரை மட்டும் முடிவு செய்ய வேண்டும். தலைவரிடம் ஆசி வாங்கிவிட்டு ரீமேக்கை துவங்க வேண்டியது தான் என்றார்.
ரியாஸ் ட்வீட்: அண்ணாமலை ரீமேக் உரிமையை வாங்கிடலாம் என சிவகார்த்திகேயன் சொன்ன வேகத்தில் அது குறித்து ரஜினிகாந்தின் மேனேஜர் ரியாஸ் அகமது ட்வீட் செய்தார். எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, கல்ட் கிளாசிக்ஸை பார்க்க மட்டும் தான் செய்ய வேண்டும், ரீமேக் செய்யக் கூடாது. தயாரிப்பாளர்கள் ஒரிஜினலை பாதுகாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ரீமேக் என்கிற பெயரில் அதன் லெகசி கெடுக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.
இது ரியாஸ் அகமதுவின் பதில் அல்ல மாறாக ரஜினிகாந்த் தரப்பு பதிலாகவே உள்ளது என்கிறார்கள் தலைவர் ரசிகர்கள். அண்ணாமலை எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு செட்டே ஆகாது. ரஜினி மாதிரி மேனரிசம் செய்து நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும் சிவகார்த்திகேயன். அண்ணாமலை ரீமேக் உரிமையை சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கவே கூடாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரியாஸின் ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்களோ, தனுஷ் மட்டும் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் மட்டும் நடிக்கக் கூடாதா?. சிவகார்த்திகேயன் என்ன தனுஷை விட குறைவாகவா நடிக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் ஏதோ விளையாட்டாக சொல்ல அது இப்படி எக்ஸ் தளத்தில் பெரிய விவாதமாக மாறிவிட்டது. இது குறித்து சிவகார்த்திகேயன் விளக்கம் அளிக்கும் வரை வாக்குவாதம் குறையாது போன்று.
ரஜினி, சிவா: ஏதாவது புதுப்படங்கள் ரிலீஸானால் அதை பார்த்துவிட்டு படக்குழுவை தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டுகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அதே போன்று நல்ல படத்தை உருவாக்கியவர்களை அழைத்து பாராட்டுகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு தான் பெரிய ரஜினிகாந்த் என நினைப்பு. அடுத்தாகஜெயிலர் 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதற்கு ரஜினியை தான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லி வாழ்த்துவார் பாருங்களேன் என்று கற்பனை வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ட்ரோல்ஸ்: அது குறித்தும் செய்தி வாசிப்பாளர்கள் சங்க விழாவில் பேசினார் சிவகார்த்திகேயன். நான் நிஜமாகவே ரஜினி சாருக்கு போன் செய்து ஜெயிலர் 2 படம் சூப்பராக வந்திருக்கு சார் என்று சொன்னேன். நெகட்டிவிட்டியை மனதில் வைக்கக் கூடாது. அது நம்மை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவிட்டி குறித்து அவர் கூறியதாவது, நான் அதை எல்லாம் பார்க்க மாட்டேன். நான் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறேன். ஆனால் அதை என் டீம் தான் பார்த்துக் கொள்கிறது. நான் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மேலும் இரண்டு ஸ்க்ரிப்ட் வேலை நடந்து வருகிறது. இது போக தயாரிப்பு வேலை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. என் கடைசி பையனுக்கு இரண்டரை வயது. நான் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறேன். என் காரில் டிரைவ் போவேன். மைண்டை ரிலாக்ஸ் செய்ய அப்படி போவேன். இது போக ஷூட்டிங் போகிறேன். ரசிகர்களை சந்திக்கிறேன். முகம் தெரிந்த இவ்வளவு பேரிடம் இருந்து பாசிட்டிவிட்டி கிடைக்கும்போது முகம் தெரியாதவர்களின் நெகட்டிவிட்டிக்கு என்னிடம் நேரம் இல்லை என்றார்.
Source link
