சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார், பெரியபுராணத்தை இயற்றினார். அது போல் தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் சேய் தொண்டத் தொகையை அடிப்படையாகக் கொண்டு சேய்த்தொண்டர் புராணம் இயற்றப்பட்டது. முருகப் பெருமானின் திருஅடியார்களின் சிறப்புகளை விவரிக்க கூடிய நூல் தான் சேய்த்தொண்டர் தொகையாகும். இந்த சேய்த்தொண்ட தொகையில் முருகப்பெருமானின் அடியார்களின் திரு சரித்திரமானது முழுமையாக உள்ளது.
முருகப்பெருமானின் பரிபூரண திருவருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சேய்த்தொண்டர் தொகையை தினமும் பாராயணம் செய்து வந்தாலே போதுமானது. முருகப்பெருமானின் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, விருத்தங்கள் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்வதை விட சேய்த்தொண்டர் தொகையை பாராயணம் செய்வது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமானது. ஆகவே தினமும் சேய்த்தொண்டர் தொகை பாராயணம் செய்வோம்.இந்த பாடலை நமக்காக தொகுத்து தந்திருப்பவர் சிதம்பரம் கோவில் அர்ச்சகர், ஜோதிடர் எம்.சிவராஜன் அவர்கள்.
சேய்த் தொண்டர் தொகை பாடல் :
1. செந்தில்வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
தென்மலைய முநிவர்க்கும் பகீரதற்கும் அடியேன்
கந்தவேட் கினியமுசு குந்தனார்க் கடியேன்
கருதுடுப்பூர் நாகனார் அடியார்க்கும் அடியேன்
அந்தமில்சீர் நக்கீரர் அடியார்க்கும் அடியேன்
அருளார்நல் லியக்கோடர் ஔவையார்க் கடியேன்
எந்தைபிரான் சேந்தனார் அடியார்க்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
2. கம்பைசூழ் காஞ்சிநகர் மாதவத்தின் பயனாய்க்
கந்தவேள் திருச்சரிதம் கடலுலகுக் களித்த
நம்பெருமான் கச்சியப்பர் அடியார்க்கும் அடியேன்
நலந்திகழும் முருகம்மை அடியார்க்கும் அடியேன்
இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்
இளந்தமிழின் செழுங்கொண்டல் எனஉலகம் பரவும்
எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
3. குமரகுரு பரஅடிகள் அடியார்க்கும் அடியேன்
கோ தில்சிவப் பிரகாசர் அடியார்க்கும் அடியேன்
திமிரமல இருளகற்று சிவஞாநி தருமைத்
திருஞாந சம்பந்த தேசிகர்க்கும் அடியேன்
அமுதகவி சம்பந்த சரணர்வர கவியென்
றறைமார்க்க சகாயர்குண சீலர்க்கும் அடியேன்
எமதுசிதம் பரதேவர் அடியார்க்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
4. வென்றிமா லைக்கவிஞர் அடியார்க்கும் அடியேன்
வியன்பகழிக் கூத்தர்தம தடியார்க்கும் அடியேன்
துன்றுபுகழ்ச் செங்கோட்டைக் கவிராஜர்க் கடியேன்
துகளறுசீர்க் கச்சியப்ப முநிவரர்க்கும் அடியேன்
நன்றுதிகழ் மாதவசுப் பிரமணியர்க் கடியேன்
நவையில்சிதம் பரமுநிவர் அடியார்க்கும் அடியேன்
என்றும்எம துளங்குடிகொள் கந்தப்பர்க் கடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
5. அரகரவேல் மயிலென்பார் எல்லார்க்கும் அடியேன்
ஆலயநற் றிருத்தொண்டர் அனைவர்க்கும் அடியேன்
முருகனையே பாடுவார் எல்லார்க்கும் அடியேன்
முத்திநிலை பெறநாடி நித்தமுரு கையன் திருவருளைச்
சிந்திப்பார் அனைவர்க்கும் அடியேன்
திருத்தணியிற் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியேன்
இருகதிரைப் புறங்காணும் அழகுசுடர் வண்ணத்
தெம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
6. காவடியில் தேன்பால்மற் றவைசுமந்து செலுத்திக்
கந்தனையே போற்றுவார் அடியார்க்கும் அடியேன்
பாவலர்மா மணிபழநித் தலசரிதம் பகர்ந்த
பாலசுப்பிரமணியர் அடியார்க்கும் அடியேன்
நாவலர்தம் மாமணிசின் னப்பர்க்கும்,
சாமி நாதர்க்கும் நலமருவு சேய்த்தொண்டர்
தம்குற் றேவல்புரி தொண்டரடித் தொண்டர்க்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
7. குகனேரி யப்பர்தம தடியார்க்கும் அடியேன்
குறைவிலருள் ஞாநவரோ தயர்தமக்கும் அடியேன்
புகழ்சேர் இராமலிங்க நாயனார்க் கடியேன்
புதிதகவி குஞ்சரத்தின் அடியார்க்கும் அடியேன்
*தகவறுமாம் பழக்கவிஞர் அடியார்க்கும் அடியேன்
தண்டபா ணிப்பெரியார் அடியார்க்கும் அடியேன்
இகமிறைஞ்சும் குமரகுரு தாசர்க்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
8. கல்லாடர் கடுவனிள எயினனார்க் கடியேன்
கருதருநல் லந்துவனார் பூதனார்க் கடியேன்
நல்லார்போற் றழிசியார் கேசவனார்க் கடியேன்
நவையறுநப் பண்ணனார் அச்சுதனார்க் கடியேன்
வல்லார்போற் றொருசேறைக் கவிராஜர்க் கடியேன்
மாசறுசிற் றம்பலநா டிகளடியார்க் கடியேன்
எல்லாமாய் இன்பமயில் ஏறிவிளை யாடும்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
9. தென்பழநிப் பதிக்கலிசைச் சேவகனார்க் கடியேன்
சிவஞாந தேசிகர்வைத் தியநாதர்க் கடியேன்
முன்பருண கிரிநாதர் திருப்புகழில் வியந்த முடிவில்புகழ்
சேர்சோம நாதனார்க் கடியேன் அன்பர்கெழு
மேலகரம் பண்டாரத் தார்,அண் ணாமலையார், கவிவீர ராகவனார்க் கடியேன்
இன்புருவாம் தேவரா யப்பெரியார்க் கடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
10. நின்றசீர் நிரம்பஅழ கியசீலர்க் கடியேன்
நிகரறுவே தாந்தசுப் பிரமணியர்க் கடியேன்
துன்றிருஞ்சீர் அழகுமுத்து நாயனார்க் கடியேன்
தோகைமயில் ஊர்பரமற் கினியதமிழ் நூல்கள் நன்றியற்றிப்
பூதவுடல் நீத்தரிய புகழாம் நல்லுடல்பெற் றினிதுலவும்
இறந்துமிற வாதார் என்றறிஞர் தொழுஞ்சீலர் அனைவர்க்கும்
அடியேன் எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
11. நாரதர்சீர் செறிபோகர் நல்லிடும்பர்க் கடியேன்
நவையில்பிர புடதேவர் முத்தப்பர்க் கடியேன்
சூரடுசேய் எழுந்தருளும் மாதலமான் மியங்கள்
சொற்றருள் புராணிகர்கள் யாவர்க்கும் அடியேன்
பாரறியச் சாற்றிடுமிச் சேய்த்தொண்டத் தொகையிற்
பாடாது விடுபட்ட அடியார்க்கும் அடியேன்
ஈரநிலத் தினிவருசேய்த் தொண்டர்கட்கும் அடியேன்
எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக் காளே.
12. வானார்ந்த சீர்கொள்திருப் புகழைஅச்சிட் டளவில்
மாண்புறுசுப் பிரமணிய வேள்அடியார்க் கடியேன்
தானாய தனிக்குமரன் திருவருள்சார் சச்சி தாநந்த நாயனார்
அடியார்க்கும் அடியேன் தேனாருங் கடம்பணிவார்
அடிநீழல் அடைந்த செல்லப்பன் காதலன் மீநாட்சி தநயன்
தேனூரன் சொக்கலிங்கன் அடிமைகேட் டுவப்பார்
திருத்தணிகை அம்மானுக் கன்பரா வாரே.
– இந்த பாடலை தொகுத்து தந்தவர்
M. சிவராஜன்
ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம்
சிதம்பரம்
தொடர்பு எண்: 8675441071
