இடைக்கால பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்- சபாநாயகர் அப்பாவு

இதுகுறித்து அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 17-ந் தேதி தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய பட்ஜெட் ஆக இருக்கும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்காக ரூ.1,000, 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விடியல் பயணத்தில் தினமும் 57 லட்சம் பேரும், மக்களைத் தேடி மருத்துவத்தில் 2 கோடியே 58 லட்சம் பேரும் பயன்பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் தி.மு.க. தலைவருக்காக தேர்தல் பணியாற்ற தயாராக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல் அமைச்சர் ஆவார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Source link