தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தமிழகத்துக்கு மேலும் இரு தங்கம்

சென்னை,

41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று ஆண்களுக் கான 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் யுவின் ஆனந்தன் ஒரு நிமிடம் 54.24 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்ப தக்கம் வென்றார். 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் யுவன் ஷரவான். பிரித்திகா, வசந்தா கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி (3 நிமிடம் 30.07 வினாடி) தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. பெண்க ளுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் அலிஸ் தேவபிரசன்னா 1.65 மீ டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். முதல் இரு இடங்களை மேற்கு வங்காள வீராங்கனைகள் ஜூயின் மந்தூசா (1.71 மீ), மொஹூர் முகர்ஜீ (1.71மீ) பெற்றனர்.

16 வயதுக்குட்டோருக்கான நீளம் தாண்டுதலில் தமிழக மங்கைகள் ஆர்த்தி (4.19 மீ). அபிநயா (4.11 மீ) முைேறய வெள்ளி, வெண்கலத்தை வென்றனர். கர்நாடகாவின் பிரப்தி தங்கப்பதக்கத்தை (4.20 மீ) தட்டிச் சென்றார். பதக்கப் பட்டியலில் தமிழ்நாடு 13 தங்கம், 7 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. உத்தரபிரதேசம் 11 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், கர்நாடகா 11 தங்கம் உள்பட 22 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் பந்தயங்கள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறும்.

Source link