கராகஸ்
வெனிசுலா அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என 11 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய எதிர்க்கட்சி தலைவி வலியுறுத்தி உள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு டிரம்ப் அரசின் ஆதரவோடு டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றார்.
நோபல் பரிசு
ஆனால், 90 நாட்கள் மட்டுமே அவர் பதவியில் இருக்க கோர்ட்டு அனுமதித்திருந்த நிலையில், இன்றுவரை தேர்தல் நடத்தப்படாமல் அவரே ஆட்சியை நீட்டித்து வருகிறார். இந்த சூழலில், கடந்த 11 மாதங்களாக நார்வேயில் அரசியல் புகலிடம் புகுந்திருந்த வெனிசுலா எதிர்க்கட்சி தலைவரும், நோபல் அமைதிப்பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, நேற்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தாய்நாட்டுக்குள் நுழைந்தார்.
அவர் கரகாஸ் நகருக்குள் வந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடனும் கரவொலியுடனும் அவரை வரவேற்றனர். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று அவர் அறிவித்துள்ள நிலையில், உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்று மச்சாடோ வலியுறுத்தியுள்ளார்.
